வெள்ளகோவில் த.வெ.க., தொண்டர்கள் செங்கோட்டையனிடம் வாக்குவாதம்
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை, வெள்ள-கோவிலில் த.வெ.க., அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
காங்கேயத்தில் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, வெள்ள-கோவிலுக்கு சென்றார். நிகழ்வில் பங்கேற்க வந்த, விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் சிலர், வெள்ளகோவில் பகுதிக்கு, த.வெ.க., மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். ஆனால் ஈரோடு மற்றும் தாராபுரம் பகுதி நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது. எங்கள் ஊருக்கு, எங்களுக்கு பதவி தரலாம். உள்ளூரை சேர்ந்தவர்க-ளுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டு, வாக்கு-வாதம் செய்தனர். அலுவலகத்துக்குள் வாருங்கள் பேசிக்கொள்-ளலாம், என செங்கோட்டையன் கூறிவிட்டு சென்று விட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement