ரயில்வே ஸ்டேஷனில் கோஷமிட்ட தி.மு.க., - பா.ஜ.,வினரால் பரபரப்பு
ஈரோடு: ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது. ஜன., 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி ரயில் நேற்றிரவு, 9:45 மணிக்கு ஈரோடு ஸ்டேஷனில் இருந்து புறப்பட இருந்தது. இந்நிலையில் ரயிலை வழியனுப்ப ஈரோடு தி.மு.க., - எம்.பி. பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திர குமார் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், காங்., கட்சியினர் வந்திருந்தனர். தமிழக முதல்வரை வாழ்த்தி கோஷங்களை
எழுப்பினர்.
தி.மு.க.,வினர் நின்ற இடத்தில் இருந்து, 20 அடி துாரம் தள்ளி மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி, மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில், 30க்கும் மேற்பட்ட பா.ஜ.வினர் நின்றிருந்தனர். அவர்கள் பிரதமரை வாழ்த்தியும், மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாக கூறி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்-டது.இந்நிலையில் எம்.பி., பிரகாஷ், கிரீன் சிக்னலை காட்டி, எக்ஸ்-பிரஸ் ரயில் இயக்கத்தை துவக்கி வைத்தார். ரயில் கிளம்பியதும் இருதரப்பினரும் கோஷமிடுவதை நிறுத்திக்கொண்டு, அமைதி-யாக கலைந்து சென்றனர்.