ஆங்கில புத்தாண்டு விழா கோலாகலம்
கரூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழி-பாடு நடந்தது.
* கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், மஹா தீபா-ராதனை காட்டப்பட்டது.* கரூர் அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவிலில், மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், கரூர் வெண்-ணைமலை, வேலாயுதம்பாளையம் புகழூர், க.பரமத்தி பால-மலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும், சிறப்பு பூஜை நடந்தது.
* கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித குழந்தை தெரசா ஆலயத்தில், நள்ளிரவு 12:00 மணிக்கு பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதில், அருட்தந்தைகள் விஜய் அமல்தாஸ், பால்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அதே போல், கரூர் (சி.எஸ்.ஐ.,) நகர ஹென்றி லிட்டில் நினை-வாலயத்திலும், நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. மேலும், புத்தாண்டை பிறப்பையொட்டி, சிறப்பு பாடல்களும் பாடப்பட்டது.
கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானா
வில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கரூர் போலீசார் சார்பில் ஏ.டி.எஸ்.பி., பிரபாகர் தலைமையில் கேக் வெட்டி கொண்டா-டினர். குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடு
பட்டிருந்த போலீசார் கேக் வழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, லாலாப்பேட்டை செம்போர்ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில், சிவன் மற்றும் அம்ம-னுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
* சிந்தலவாடி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்-காரம் செய்யப்பட்டது. லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்-பட்டி, புனவாசிப்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* புன்னம்சத்திரம் அருகே, கரியாம்பட்டியில் உள்ள அங்காள பர-மேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்-வரி அம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.