ஏரியில் சாய்ந்த நிலையில் ஆபத்தான மின்கம்பம்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், பட்டனுார் கிராமம், பூசன்கொட்டாய், பொன் நகர் ஏரியில் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இந்த ஏரியில் மழைநீர், அப்பகுதி மலைகளில் இருந்து வரும் உபரிநீரால் ஏரியில் அதிகளவு நீர் தேங்கி, விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. ஏரி நடுவே, மண்ணை அள்ளி வெறுமனே மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

இதனால் ஏரி மற்றும் ஏரியை ஒட்டிய மின்கம்பங்கள் தற்போது சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி, ஏரியில் உள்ள நீரை பயன்படுத்தும்போது, ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. சம்மந்தப்பட்ட மின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement