கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங் சாம்பியன் பட்டம் வென்றார்.
டில்லியில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், 'நடப்பு சாம்பியன்' தென் கொரியாவின் ஆன் சே யங், சீனாவின் வாங் ஜி யி மோதினர். மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆன் சே யங் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக (2023, 2025, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சீனதைபேயின் லின் சுன்-யி, இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய லின் சுன்-யி 21-10, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் ஆனார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்
Advertisement
Advertisement