தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் எம்ஜிஆர் படம் நீக்கப்பட்டது வன்மம்; ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்
சென்னை: சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். படத்தை நீக்கிவிட்டால், அவரது புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க.வினருக்கு எம்.ஜி.ஆர். மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் தி.மு.க.வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது. 1981ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.
1981ம் ஆண்டு அண்ணாதுரை பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர். பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த எம்.ஜி.ஆரின் படமும் நீக்கப்பட்டுள்ளதாம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர். பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, முதல்வர் ஸ்டாலினின் மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது. 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்தி விடலாம்" என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். படத்தை நீக்கிவிட்டால், எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
வாழ்நாள் எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து, தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்ற எம்.ஜி.ஆருக்கு. மக்களே கோவில் கட்டி வழிபடுகிறார்கள்.
எம்.ஜி.ஆரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம். இது போன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் எம்.ஜி.ஆர். படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எம்.ஜி.ஆர். புகழை அழிக்க நினைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் எம்ஜிஆர் படம் நீக்கப்பட்டது பெயர் நீக்கப்பட்டது அரஜாகத்தின் உச்சம். திராவிட மாடல் அரசை அகற்றிவிட்டு வரப்போகும் அடுத்த அரசு கலைஞர் முதல்வர் புள்ளையாண்டான் பெயர்கள் உள்ள எல்லா இடங்களிலுருந்தும் அகற்றப்படும் இது மக்களின் விருப்பம்
அய்யா தாங்கள் மீண்டும் முதல்வராக பணியேற்றபின் முதல் ஆணை அனைத்து திட்டங்களுக்கும் காமராஜ் பாரதியார் பாரதிதாசன் திருவள்ளுவர் ராஜராஜசோழன் சேரண் பாண்டியன் போன்ற மன்னர்கள் பெயர்கள் ஆகியவற்றை மட்டுமே வைக்க வேண்டும்
ஆமாம். படித்து பி.ஹெச்.டி வாங்கினவர் பேரை எடுத்துட்டாங்க. மாணவர்களுக்கு ரொம்ப நஷ்டமாயிருச்சு.
ஏதோ கண்ணுக்கு தெரியாத அழிவை நோக்கி போறானுங்க என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவனுங்க காந்தி பேரை நீக்கிப்புட்டாங்க ன்னு நீலிக்கண்ணீர் வடிக்குறானுங்க. இவனுங்க எங்கெல்லாம் பணம் திருடுறான்களோ அங்கெல்லாம் மோடி ஆப்பு அடிச்சு வுடுறாரு. அதான் உண்மை. இது பத்தி பேசுனா சில உருப்புடாதவன்கள் பதினஞ்சு லட்சம் என்னாச்சிம்பானுங்க. அதாவது இவனுங்களை நாம் ரொம்ப யோக்கியன்னு நினைச்சுக்கணுமாம்.
அண்ணா திமுக மற்றும் பிஜேபி கட்சியின் கூட்டணி உறுதி தன்மை எடப்பாடியால் சிதைந்து வருகிறது. திமுக கூட்டணியில் உரசல் அதிகம் என்றாலும், வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பொறுப்பை பிஜேபியிடம் ஒப்படைக்க முடியும். திமுக வென்றால், நிதி நெருக்கடி உச்சம் இருக்கும். எடப்பாடி கட்சி இறுதி நிலை அடையும். MGR , படம் ஆட்சிக்கு வந்த பின் பார்க்கலாம்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எங்கெல்லாம் கருணாநிதி பெயர்பலகைகள் உள்ளதோ அதையெல்லாம் நீக்கவேண்டும். கருணாநிதியின் பெயரில் இருக்கும் ஊர்களையும் நீக்கவேண்டும்.
உங்களுக்கு என்னோட அப்ளாஸ். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறோம். இது நிச்சயம் நடக்கும். கருணா தை மாதத்தில் வருடப்பிறப்பு ன்னு ஒரு ரூல் போட்டார். அடுத்த பீரியட்ல ஜெய அம்மா ஆட்சிக்கு வந்துது. அதை தூக்கி அடிச்சு 10 கிலோ கரியை வாங்கி கருணா மூஞ்சிலே தடவி வுட்டுடிச்சி.
ஊழல் கருணாநிதி பெயர் வைத்தால் நாடு அழிவை நோக்கி சென்றுவிடும்மேலும்
-
தமிழக காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
-
மார் கழி வழிபாடு: மார்கழி வழிபாடு
-
பாரத் மாதா கீ ஜே,: பக்தர்கள் கோஷம்; அமைச்சர் சேகர்பாபு ஆத்திரம்
-
தேசியம்
-
சிரியா முன்னாள் அதிபர் ஆசாத் உருவம் பதித்த கரன்சிகள் மாற்றம்
-
ஒரே ஆண்டில் 201 வழக்குகள் பதிவு; கேரள ஊழல் தடுப்புப்பிரிவு அதிரடி