தி.மு.க., கூட்டணிக்குள் குழப்பம்: தமிழிசை

1

துாத்துக்குடி: 'தி.மு.க., கூட்டணிக்குள் குழப்பம் துவங்கி விட்டது,' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்றால், தி.மு.க., தலைமையகமான அறிவாலயம் நோக்கித்தான், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பாத யாத்திரை செல்ல வேண்டும். இந்த பாத யாத்திரையை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. தி.மு.க., கூட்டணிக்குள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது.

காங்.,கை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, 'தமிழகத்தில் கடன் அதிகமாகி விட்டது,' என்கிறார். ஆனால், அதே கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், 'மாநில கடனை வைத்து மதிப்பிடக்கூடாது' என கூறியிருப்பது ஆச்சரியம். அந்த அளவுக்கு, அறிவாலய அடிமையாகி விட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் கோவில் வாசலில் நின்று கொண்டு, அமைச்சர் சேகர்பாபு, ஹிந்து பக்தர்களை பார்த்து தவறான கருத்துகளை பேசி உள்ளார். இதேபோல, சர்ச், மசூதி ஆகியவை முன் நின்று பேச முடியுமா? சட்டசபை தேர்தலில் இதற்கான விடையை பார்ப்பீர்கள்.

எங்களை, அடிமை கூட்டணி என தி.மு.க., கூட்டணியினர் கூறுகின்றனர். அசுர சக்தியோடு, அடித்து நொறுக்கும் கூட்டணியாக, எங்கள் தே.ஜ., கூட்டணி இருக்கிறது. ஓட்டு சதவீதம், அனுபவம் அடிப்படையில் பலமாக இருக்கிறோம். தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது. வரவில்லை என்றால் அவருக்குதான் கெடுதல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement