தேர்தலில் இவிஎம் பயன்படுத்த கர்நாடகாவில் 85% மக்கள் நம்பிக்கை; ராகுலை விளாசிய பாஜ
பெங்களூரு: கர்நாடகாவில் 2024 லோக்சபா தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு 85 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளது, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் முகத்தில் விழுந்த அறை என்று பாஜ விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல்கள் 2024 குடிமக்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் நடைமுறை பற்றிய மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வின் ஒரு பகுதியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 102 சட்டசபை தொகுதிகிளில் 5100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், 83.61 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது என்று கூறி இருக்கின்றனர். ஒட்டு மொத்தமாக, 69.39 சதவீதம் பேர் இந்த இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு, பெலகாவி, கலபுராகி, மைசூரு ஆகிய மண்டலங்களில் உள்ள மக்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர்களில் கலபுராகி பகுதியில் 83.24 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது என்று தெரிவித்துள்ளனர். இதுவே மைசூருவில் 70.67 சதவீதம், பெலகாவியில் 63.90 சதவீதம், பெங்களூருவில் 63.67 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி, ராகுலை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனம்வாலா கூறுகையில், கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது தேர்தல் கமிஷன் மீது எவ்வித புகாரும் கூறாதவரும் இதே ராகுல்தான். தேர்தலில் தோற்கும் போது தேர்தல் கமிஷனை குற்றம் சொல்கிறார்.
அவரிடம் தான் பிரச்னை உள்ளது, தரவுகளில் அல்ல. அதை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு மாயையில் வாழ்கிறார் என்றார்.
கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில், நாடு முழுவதும் பயணித்து, நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கதை சொன்னவர் ராகுல். இப்போது கர்நாடகா ஆய்வுகள் வித்தியாசமான கதையை சொல்லி இருக்கிறது. மக்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நம்புகின்றனர். காங்கிரசின் கண்டுபிடிப்பு, அக்கட்சியின் முகத்தில் விழுந்த ஓர் அறை என்று கூறினார்.
வாசகர் கருத்து (10)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
03 ஜன,2026 - 02:17 Report Abuse
வோட்டிங் மெஷின் இந்தியாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம். கள்ளஓட்டுக்களை தடுக்கும். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
02 ஜன,2026 - 20:20 Report Abuse
மனநிலை பரிசோதிக்கப்பட்ட வேண்டும் .... 0
0
Reply
Balasubramanian - ,
02 ஜன,2026 - 19:41 Report Abuse
அவர்கள் ஜெயித்தால் ஜனநாயத்தின் வெற்றி! தோற்றால் ஓட்டு மெஷின் தில்லு முல்லு, தேர்தல் கமிஷன் சதி வோட் சோரி! 0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
02 ஜன,2026 - 19:41 Report Abuse
73 மில்லியன் வாக்காளர்கள் உள்ள கர்நாடகாவில் வெறும் 5100 பேரிடம் கருத்தை கேட்டு 85 சதவீதம் ஆதரவு என சொல்வது நகைச்சுவையாக உள்ளது. அதிலும் இவனுங்க அதிகமாக சங்கிகளைத்தான் கருத்து கேட்டிருப்பார்கள். 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
02 ஜன,2026 - 22:05Report Abuse
நீ அறிவாளி நாராயண குத்து . நீ பொய் 73 மில்லியன் பேரிடம் பொய் பெசி வோட்டு மெஷின் வேஸ்ட்ன்னு பொய் ராகுல் கிட்ட சொல்லு. 0
0
vadivelu - thenkaasi,இந்தியா
02 ஜன,2026 - 22:26Report Abuse
ஆமாம் உங்களிடம் கேட்க வேண்டியது இல்லை, பொது மக்களிடம்தான் கேட்கணும் 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
02 ஜன,2026 - 17:47 Report Abuse
குழந்தாய் ராகுல் உனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோருக்கும் தெரியும் அதற்காக இப்படி தினம் தினம் உளறிக்கொண்டே இருக்க வேண்டுமா??? ஆமாம் நீ ?இத்தாலி குடிமகனா??இங்கிலாந்து குடிமகனா??அது எப்படி உன்னிடம் 3 பாஸ்போர்ட்டுகள் இருக்கும்???முதலில் நீ இந்தியனானால் போதும் உனது உளறல்கள் உடனே அடங்கும். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
02 ஜன,2026 - 17:47 Report Abuse
Karnataka govt survey says 84% people trust elections Karnataka is 84% Hindu India is democratic only as long as it is Hindu! 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
02 ஜன,2026 - 17:16 Report Abuse
தேர்தல் ஆணையம் எத்தினியோ தடவை அறை கூவி அழைத்தது. இ வி எம் மிஷினில் கள்ள ஓட்டு போடலாம் என்பதை நிருபிக்க சொன்னது. மேடை யில் கத்தியவன்கள் மேடையிலிருந்து குதிச்சு ஓடிட்டானுங்க. தேர்தல் ஆணையம் அவன்களை தேடி அலுத்து விட்டது. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
02 ஜன,2026 - 17:10 Report Abuse
யாராவது ராகுல் நேரில் அறைந்தால்தான் அறை ன்னு ஒண்ணு இருக்கு அது நமக்கே விழும் ன்னு ராகுல்+கான் தெரிஞ்சிப்பாரு. இப்போதைக்கு ராஜா வூட்டு கன்னுக்குட்டி. அறை விழுந்தால் தான் மோடியை தரக்குறைவா பேசும் மமதை போகும். 0
0
Reply
மேலும்
-
இணை பிரிந்தால்... உயிர்துறக்கும் புறாக்கள்!
-
பாதாள சாக்கடை குழியில் விழுந்து குழந்தை பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு
-
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
-
ப.பாளையம், கு.பாளையத்தில் கடந்தாண்டு மழையளவு குறைவு
-
ராசிபுரம் - மோகனுார் சாலையில் நிழற்கூடப்பணி பாதியில் நிறுத்தம்
-
இந்த மீன்களை இப்படி வளர்க்கலாம்!
Advertisement
Advertisement