ராசிபுரம் - மோகனுார் சாலையில் நிழற்கூடப்பணி பாதியில் நிறுத்தம்
ராசிபுரம்: ராசிபுரம் - மோகனுார் சாலையில் பாதியில் நிறுத்தப்பட்ட நிழற்கூட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராசிபுரத்தில் இருந்து மோகனுார் வரை தொழில் வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிங்களாந்தபுரம், பேளுக்கு-றிச்சி, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதி-களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பேளுக்குறிச்சி அடுத்த உத்தரகிடிகாவல் ஊராட்சியில் உள்ள கணவாய் பகுதியில், சாலை மிகவும் பள்ளமாக அமைக்கப்-பட்டது.
இதனால் அங்கிருந்த பழைய பயணியர் நிழற்கூடம் மிகவும் உயரமான பகுதிக்கு சென்றுவிட்டது. பயணிகள் வெயில், குளிர், மழைக் காலங்களில் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சாலையோரம் நின்று அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சாலையோரம் புதிய நிழற்கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், கட்டுமான பணி தொடங்கிய சில நாட்களிலேயே, இப்பணி பாதியில் நிறுத்தப்பட்-டுள்ளதால், பயணிகள் மீண்டும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பாதியில் நிறுத்தப்-பட்டுள்ள பயணியர் நிழற்கூட பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்-துள்ளனர்.
மேலும்
-
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்
-
சம வேலைக்கு சம ஊதியம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
-
கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
கைவினை திட்டத்தின் கீழ் 236 பேருக்கு 3.36 கோடி ரூபாய் வழங்கல்: கலெக்டர்
-
கால-வெளியை சுழற்றி இழுக்கும் கருந்துளை
-
சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்