ப.பாளையம், கு.பாளையத்தில் கடந்தாண்டு மழையளவு குறைவு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியில், 2024ம் ஆண்-டைவிட, 2025ல் 188 மி.மீ., மழை குறைவாக பெய்துள்ளது.
பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, சமயசங்-கிலி, எலந்தகுட்டை பகுதிகள் விவசாயம் நிறைந்தவையாகும். இங்கு, ஏரி, குளம், ஓடை, நீர்த்தேக்க பகுதிகளில், தண்ணீர் தேங்கி இருந்தால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்படும். இந்த நிலத்தடி நீர் மற்றும் மழையை நம்பியே விவசாயிகள் சாகு-படி பணியை துவக்குகின்றனர். மழை பெய்தால் மட்டுமே, நீர்நி-லைகளுக்கு தண்ணீர் வந்து சேரும். இவ்வாறு நீர் நிலைகளுக்கு வந்து சேரும் தண்ணீர், பல மாதங்கள் தேங்கி இருக்கும்.
கடந்த, 2025ல், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தளவு பெய்யவில்லை. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிர்-பார்த்திருந்தனர். கடந்த ஓரிரு மாதங்களாக தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகளுக்கு மழைநீர் வந்து சேர்ந்தது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்தது. இருந்தாலும் கடந்தாண்டு மழையளவு குறைவாகவே பெய்துள்-ளது.
இதுகுறித்து, குமாரபாளையம் நீர்வளத்துறை அதிகாரி கூறியதா-வது:
கடந்த, 2024ல், 760.20 மி.மீ., அளவிற்கு மழைப்பொழிவு இருந்தது. ஆனால், 2025ல், 572 மி.மீ., அளவிற்கு மட்டுமே மழை பொழிந்துள்ளது. இந்த மழையளவு, 2024ம் ஆண்டை விட, 2025ம்ல், 188 மி.மீ., குறைவு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்
-
சம வேலைக்கு சம ஊதியம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
-
கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
கைவினை திட்டத்தின் கீழ் 236 பேருக்கு 3.36 கோடி ரூபாய் வழங்கல்: கலெக்டர்
-
கால-வெளியை சுழற்றி இழுக்கும் கருந்துளை
-
சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்