புத்தரின் புனிதப்பொருட்கள் கண்காட்சி; டில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

1

புதுடில்லி: நாளை (ஜன.3) கவுதம புத்தரின் புனிதப் பொருட்கள் கண்காட்சியை திறக்கிறேன், இது ஒரு மிக சிறப்பான நாள் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;

ஜன.3ம் தேதியான நாளை, வரலாறு, கலாசாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள். காலை 11 மணிக்கு, பகவான் புத்தர் தொடர்பான புனித நினைவுச்சின்னங்களின் மாபெரும் சர்வதேசக் கண்காட்சி, ஒளியும் தாமரையும்: ஞானம் பெற்றவரின் நினைவுச்சின்னங்கள் என்ற பெயரில் டில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாசார வளாகத்தில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்தக் கண்காட்சியானது நூற்றாண்டுகள் கழித்து கொண்டு வரப்பட்ட பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்கள், டில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கோல்கட்டாவில் இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள உண்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

கண்காட்சி, பகவான் புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது. நமது இளைஞர்களுக்கும் நமது செழுமையான கலாசாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. நினைவுச்சின்னங்களைத் தாயகம் கொண்டு வர உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

இவ்வாறு பிரதமர் மோடி தமது பதிவில் கூறி இருந்தார்.

Advertisement