ஒரே ஆண்டில் 201 வழக்குகள் பதிவு; கேரள ஊழல் தடுப்புப்பிரிவு அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவில், கடந்த ஆண்டில் மட்டும் 201 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் என, 76 பேர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நடவடிக்கை
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 'ஊழலற்ற கேரளா' என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடந்த ஆண்டில் அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு தீவிரப்படுத்தியது.
இதன்படி, ஓராண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கேரள ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை:
கேரளாவின் ஊழல் தடுப்புப் பிரிவு, 2025ம் ஆண்டில் மட்டும் 201 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இவற்றில் பொறி வைத்து பிடித்ததில், மொத்தம் 57 வழக்குகளில் 76 பேரை கைது செய்துள்ளோம். இதில் அதிகபட்சமாக வருவாய் துறை அதிகாரிகள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்ததாக உள்ளாட்சி துறை மீது 12 வழக்குகளும், போலீஸ் துறையில் ஆறு வழக்குகளும் பதிவாகி உள்ளன. கல்வித்துறை மற்றும் மின் துறையில் தலா மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர பல்வேறு துறைகளில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிராந்திய வாரியாக அதிகபட்சமாக, எர்ணாகுளத்தில் உள்ள மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 28 வழக்குகள் பதிவாகி உள்ளன.
அரசு அலுவலகங்களில் ஊழலுக்கு வழிவகுப்பதில் இடைத்தரகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதன் காரணமாக இடைத்தரகர்களை கைது செய்வதில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிக கவனம் செலுத்தியது.
முறைகேடு
இது தவிர ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து தடுக்க, மாநிலம் முழுதும் 1,152 ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் மூலம், கடந்தாண்டில் மட்டும் 14.92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஜய்யோ பாவம் சிக்கி கிட்டவனை பார்த்து சிக்காதன் சிரிக்கிறான்.... இதை பிடிக்க பொறியா? அதுவா அவல் பொறி......
Arrest of Keralite Christian Pastors, Wife and 12 Others in Nagpur for Conversion of HINDUs... Terrorist, Pedophiles Welcome to 100% Literacy State Kerala ..........
அந்த பிரியாணி அண்டா தங்கம் அதெல்லாம் கணக்கில் வருமா ஆபிசர்
முதல்வர் குடும்பம் மீதே ஊழல் வழக்கு. பினராயி தப்பித்து கொண்டிருக்கிறார்.
201 வழக்காம் , பிடிபட்டது வெறும் 14 லட்சம் சொச்சமாம். மூட்டை அரிசியை ஒளித்துவைத்துவிட்டு, அரை கிலோ பாக்கெட்டை பிடிக்கக் கண்ணில் காட்டியிருப்பார்கள் போலிருக்கிறது ஆனாலும், நம் மாடல் மாநிலத்தை விடப் பரவாயில்லை என்று வேண்டுமானால் கொஞ்சம் பாராட்டி விடுவோம்
தமிழக லஞ்சஒழிப்புத்துறை இது போல வெள்ளை அறிக்கை வெளியிட்டால் அது கருப்பு கலரில் இருக்கும்...
இதுபோன்ற ஒரு அறிக்கையை தமிழ்நாடு ஊழல்தடுப்பு பிரிவு வெளியிட்டால் மக்களறிவார்கள் .மேலும்
-
பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.8000 ஆக உயர்த்திடுக: பா.ஜ.,
-
டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
-
வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல்: கியூபாவை சேர்ந்த 32 பேர் பலி
-
துபாயில் கார் விபத்து; கேரளாவைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி