தமிழக காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
- நமது நிருபர் -
'ஒரு சிலரின் சுயநலத்துக்காக, தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது' என, கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
எந்த ஒரு அரசியல் கட்சியும், தன் கட்சி எம்.பி.,யை, தேர்தல் நேரத்தில், தேர்தல் கமிஷனுக்கு, ஓட்டுச்சாவடி முகவர் பட்டியலைக்கூட கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடக்கும் விஷயங்கள், மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்து போகச் செய்ய நடக்கும் முயற்சிகள், மிகுந்த வேதனை அளிக்கின்றன.
மனச்சோர்வு
தினமும், தமிழக காங்கிரஸ், மக்கள் பிரச்னைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழகம் எந்த காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடம் எதிர்நோக்கி உள்ளது.
இந்த சூழலில், வரும் சட்டசபை தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழக காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தொடரும் உட்கட்சி பிரச்னைகள், மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன.
சித்தாந்த ரீதியான அரசியலை வலுவாக முன்னெடுக்கவில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல், வெறும் கூட்டல் - கழித்தல்களை மட்டுமே செய்து, ஒரு சிலரின் சுயநலத்துக்காக, தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது என்பதை, உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.
ராகுலின் தன்னலமற்ற, கொள்கை பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு, நேர் எதிரான பாதையில் தமிழக காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்புக்கும், ஒப்பற்ற தியாகத்துக்கும், நாம் துரோகம் செய்ய முடியாது.
ஆதங்கம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது, காமராஜர் கட்டிக் காத்த பாரம்பரியத்துக்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்துக்குமான, தமிழக மக்களின் அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் குறித்த தன் ஆதங்கத்தை ஜோதிமணி எம்.பி., அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தாலும், காங்., கட்சியை யார் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வது என பெயர் குறிப்பிடாமல் சொல்லி இருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரசாரிடம் விசாரித்தபோது, 'தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையைத் தான், ஜோதிமணி பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்' என தெரிவித்தனர்.
@block_B@ மல்லுக்கட்டும் மூவரணி வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அடங்கிய மூவர் அணி உறுதியாக உள்ளது. லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர்கள் பிரியங்கா, வேணுகோபால் ஆகியோர் அடங்கிய மூவரணி, த.வெ.க., கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது. தமிழக காங்.,கின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களை, ராகுலின் நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி ரகசியமாக சந்தித்து, த.வெ.க., கூட்டணியில் இடம் பெற ஆதரவு திரட்டி வருகிறார். எனவே, மூவர் அணியில், எந்த அணி வெல்லப்போகிறது என்பது பொங்கலுக்கு பின்னர் தெரிய வரும்.block_B
@block_B@ செல்வப்பெருந்தகையை கண்டித்து தமிழக காங்., நிர்வாகி ராஜினாமா காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோருக்கு, கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஏ.பி.சூர்யபிரகாசம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தி.மு.க.,வின் அடிமைகள் கூடாரமாக தமிழக காங்கிரசை மாற்ற, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பதை, தி.மு.க., அரசே கடந்த ஆண்டின் பட்ஜெட் அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், உண்மைக்கு மாறாக, தி.மு.க., அரசின் மீது பழி போடுவதாக, காங்., தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவராக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி மீது வசைபாடி வருவது கண்டிக்கத்தக்கது. வரும் சட்டசபை தேர்தலில், வெகுஜன தி.மு.க., எதிர்ப்பால், தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும். இதில், காங்கிரசும் சேர்ந்து படுதோல்வி அடையக்கூடாது. அதனால், காங்., - த.வெ.க.,வோடு தேர்தலுக்காக கூட்டணி அமைக்க வேண்டும். அப்படி கூட்டணி அமைத்தால், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும். ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால கனவும் நிறைவேறும். ஆட்சியில் பங்கு கோஷத்தோடு போராடும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களை, 'தற்குறிகள்' என வெளிப்படையாக விமர்சித்து அவமானப்படுத்திய செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் தொடர்ந்து பணியாற்ற, என் சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை. எனவே, நான் வகித்து வரும் தமிழக காங்., செயற்குழு உறுப்பினர் மற்றும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்; காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B
நல்ல நிலயில் கட்சி உள்ளது. யாரும் கெடுக்க வேண்டாம்.
எதோ இவர்கள் ஆட்சி அமைத்து கோலோச்சிக்கொண்டிருப்பதை போல் அழியப்போகிறார்களாம், பீகார் தேர்தலின் பிரச்சாரத்தின்போது குளத்தில் குதித்து மீன் பிடிக்க இறங்கிய எதிர்க்கட்சி தலைவரின் முதிர்ச்சி , என்னமோ இவர்கள் கட்சி வளர்ந்துகொண்டிருப்பதைப்போல் ஒரு பீலா விடுகிறார்கள்...அடித்து புரண்டாலும் இவர்கள் பிரிய மாட்டார்கள், மத்தியில் தி மு க வின் எம்பிக்கள் ஆதரவு இவர்களுக்கு தேவை...ஒரு வேளை காங்கிரஸ் கட்சி விஜயோடு கூட்டணி சேர்ந்தால் த வெ க ஆட்சியை பிடிக்கலாம் ஆனால் தற்போதய நிலையில் பிரிவது சாத்தியக்குறைவுதான்...தயார் செய்யுது மேடை பேச்சி மட்டும் போதாது எதிர்க்கட்சி தலைவருக்கு அரசியல் தேவைக்கேற்ப முதிர்ச்சி தேவை அது இல்லாத பட்ச்சத்தில் தமிழகத்தில் சீமான் கட்சி போல் இன்னும் 400 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை..
ரைட்டு. காங்கிரெஸ்ல பதவி ஆசை தலைதூக்குது. வண்டி ரூட் மாறுது. இதில் பாரம்பரியம், மக்கள் சேவை, இடியாப்பம் எல்லாம் வெறும் கதை தானே.மேலும்
-
இணை பிரிந்தால்... உயிர்துறக்கும் புறாக்கள்!
-
பாதாள சாக்கடை குழியில் விழுந்து குழந்தை பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு
-
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
-
ப.பாளையம், கு.பாளையத்தில் கடந்தாண்டு மழையளவு குறைவு
-
ராசிபுரம் - மோகனுார் சாலையில் நிழற்கூடப்பணி பாதியில் நிறுத்தம்
-
இந்த மீன்களை இப்படி வளர்க்கலாம்!