பாரத் மாதா கீ ஜே,: பக்தர்கள் கோஷம்; அமைச்சர் சேகர்பாபு ஆத்திரம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாமலையர் சுவாமி கோயில் தேரோட்டத்திற்கு தாமதமாக அமைச்சர் சேகர்பாபு வந்ததால் ஆவேசமடைந்த பக்தர்கள் பாரத் மாதா கீ ஜே, ஓம் காளி, ஜெய் காளி என கோஷங்களை எழுப்ப, ஆத்திரமுற்ற அமைச்சர் சேகர்பாபு, ''நீங்கள் எல்லாம் சோறு சாப்பிடுகிறீர்களா, '' என கேள்வி எழுப்பியதால் இரு தரப்பினருக்கும் வார்த்தை போர் மூண்டது.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயில் மார்கழி திருவிழாவின் தேரோட்டம் நேற்று காலை 9:15 முதல் 10 : 15 மணிக்குள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கூடியிருந்தனர். இந்நிலையில் தேருக்கு சுவாமி எழுந்தருளாமல் தாமதம் ஆனதால் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருவது தாமதமானதால் தேவசம் அதிகாரிகள் சுவாமி வாகனம் எடுக்க தயக்கம் காட்டினர். பின் ஒருவழியாக வாகனம் புறப்பட்டு கோயிலை வலம் வந்த பின் தேரில் சுவாமி எழுந்தருளினார்.
சுமார் 10:00 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் வந்தார். அமைச்சருக்காக தேர் வடம் பிடிப்பதை தாமதப்படுத்தியதால் ஆவேசமடைந்த பக்தர்கள், 'பாரத் மாதா கீ ஜே, ஓம் காளி, ஜெய் காளி, திருப்பரங்குன்றம் முருகா, வீரசாவர்கர் வாழ்க, சிவாஜி வாழ்க,' என கோஷங்களை எழுப்பினர்.
இதனால் ஆத்திரமுற்ற அமைச்சர் சேகர்பாபு,''கோயிலில் போடவேண்டிய கோஷம் மட்டும் தான் போட வேண்டும். தேவையில்லாத கோஷங்கள் போடக்கூடாது,'' என்றார். இதனால் மீண்டும் பக்தர்களிடம் பலத்த கோஷம் எழுந்தது. இதை கண்ட அமைச்சர்,''நீங்கள் எல்லாம் சோறு சாப்பிடுகிறீர்களா. வேறு ஏதாவது சாப்பிடுகிறீர்களா,'' என்றார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்கள் எழுந்தன. இதற்கிடையில் தெப்பக்குளம் சீரமைப்பு பணியை வந்து பார்வையிட வேண்டும் என்று அப்பகுதியினர் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது நேரம் இல்லை என அமைச்சர் நிராகரித்தார். இதனால் பக்தர்கள் மேலும் கோபமடைந்தனர். இதற்கிடையில் உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ், ''வீர சாவர்க்கர் கொலை வழக்கில் எத்தனையாவது குற்றவாளி என்று தெரியுமா,'' என அங்கு நின்ற பா.ஜ., ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.
பின் நிருபர்களை சந்தித்த மனோதங்கராஜ், ''வரும் தேர்தலில் மதத்தை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிப்பதற்காக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.
தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் அச்சிட முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்ததுடன் ஒற்றைக்கு ஒற்றைக்கு வாருங்கள் பார்க்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு பேசியது பக்தர்கள் மத்தியில் சர்ச்சை, அதிருப்தியை ஏற்படுத்தியது.
@block_B@ நேற்று தேரோட்டம் இன்று ஆருத்ரா தரிசனம் இந்த களேபேரங்களுக்கு மத்தியில் நேற்று காலை 10:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் என மூன்று தேர்கள் வலம் வந்தன. தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு வாரிய தலைவர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்றிரவு 12:00 மணிக்கு சப்தாவரணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா நிறைவு நாளான இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5:00 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதல், இரவு 9:00 மணிக்கு ஆராட்டு நடக்கிறது.block_B
திருப்பரங்குன்றம் முருகனே பார்த்து கொள்வார்.
எல்லோரும் ரௌடிகள் ஆக மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது!
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததாமேலும்
-
இணை பிரிந்தால்... உயிர்துறக்கும் புறாக்கள்!
-
பாதாள சாக்கடை குழியில் விழுந்து குழந்தை பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு
-
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
-
ப.பாளையம், கு.பாளையத்தில் கடந்தாண்டு மழையளவு குறைவு
-
ராசிபுரம் - மோகனுார் சாலையில் நிழற்கூடப்பணி பாதியில் நிறுத்தம்
-
இந்த மீன்களை இப்படி வளர்க்கலாம்!