தேசியம்
கவலை அளிக்கிறது!
நாட்டில், நன்கு படித்தவர்கள் சமூக விரோத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கவலை அளிக்கிறது. டில்லி குண்டுவெடிப்பில் ஈடு பட்ட டாக்டர்கள், மருந்துச் சீட்டுகளுக்கு பதில், வெடிகுண்டுகளை வைத்திருக்கின்றனர். இது, அறிவுடன் நற்பண்பு களும், நல்லொழுக்கமும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
உணர்வற்ற அரசு!
கிரேட்டர் நிகோபார் தீவில், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் இயற்கையை அழிப்பதில் பிரதமர் மோடி அரசு தீவிரமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை காட்டிலும், வணிகம் செய்வதை இந்த அரசு ஊக்குவிக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்னைகளில் பா.ஜ., அரசு மிகவும் உணர்வற்றதாக இருக்கிறது. ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,
உரிமை இல்லை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் மம்தானி கடிதம் எழுதியது கண்டனத்துக்குரியது. நம் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இது போன்ற எந்தவொரு செயலையும் நம் நாடு பொறுத்துக் கொள்ளாது. கவுரவ் பாட்டியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
மேலும்
-
பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.8000 ஆக உயர்த்திடுக: பா.ஜ.,
-
டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
-
வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல்: கியூபாவை சேர்ந்த 32 பேர் பலி
-
துபாயில் கார் விபத்து; கேரளாவைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி