எருமப்பட்டி வாய்க்கால் துார்வார வேண்டுகோள்
எருமப்பட்டி: சிங்களகோம்பை ஏரியில் இருந்து செல்லும் எருமப்பட்டி வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எருமப்பட்டி அருகே, கொல்லிமலை அடிவாரத்தில் சிங்கள-கோம்பை ஏரி உள்ளது. இந்த ஏரி, கொல்லிமலையில் கனமழை பெய்யும் காலங்களில், ஆண்டுதோறும் நிரம்பி வருகிறது. ஏரி நிரம்பியதும், வடிகால் மூலம் எருமப்பட்டி வாய்க்கால் வழியாக அங்குள்ள ஏரிக்கும், அதை தொடர்ந்து திப்பரமாகதேவி ஏரிக்கும் சென்று, பின் காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் நீர் வழிப்-பாதை உள்ளது.
2 ஆண்டுகளாக சிங்களகோம்பை ஏரி நிரம்பி, தண்ணீர் வாய்க்கால் வழியாக எருமப்பட்டி ஏரிக்கு சென்றது. தற்போது, தண்ணீர் செல்லும் வாய்க்கால் முழுவதும் முட்புதர் மண்டி உள்-ளதால், மழைநீர் கடைசி வரை செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே, சிங்களகோம்பையில் இருந்து தண்ணீர் செல்லும் வாய்க்-காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசா-யிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை