சாலை சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை

பொன்னேரி: அரசூர் கிராமத்தில் உள்ள சாலை சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி அடுத்த அரசூர் கிராமத்தில், கும்மிடிப்பூண்டி, மெதுார், பொன்னேரி ஆகிய மூன்று ஊர்களுக்கு சாலைகள் பிரியும் சந்திப்பு உள்ளது.

இங்கு, வழிகாட்டி பலகைகள் இல்லாததால், புதிதாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், வழி தெரியாமல் மாற்று திசையில் பயணித்து தவிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement