ஏரியின் மதகு சேதம் அதிகாரிகள் அலட்சியம்
திருத்தணி: பி.சி.என்.கண்டிகை ஐவாரி ஏரியின் மதகு நான்கு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த நிலையில், சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பி.சி.என்.கண்டிகை கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்டோர் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், பி.சி.என்.கண்டிகை ஐவாரி ஏரியின் நீர்ப்பாசனத்தை நம்பியே உள்ளனர். இந்த ஏரி, 60 ஏக்கர் பரப்பளவு உடையது. ஏரியின் மதகு நான்கு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது.
இதனால், பருவமழையின் போது ஏரியில் தேங்கும் தண்ணீர், சேதமடைந்த மதகு வழியே வீணாகி வந்தது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கை தொடர்ந்து, கடந்தாண்டு மதகில் இருந்து வெளியேறும் தண்ணீரை தற்காலிகமாக தடுப்பதற்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
அதன்பின்னும், ஏரியின் மதகை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய ஐவாரி ஏரியின் மதகு மீண்டும் சேதமடைந்து, தண்ணீர் வீணாகியது. ஏற்கனவே, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளும் சேதமடைந்தன.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஐவாரி ஏரியின் மதகை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை