தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளூர்: புதிய தொழிற்பள்ளி மற்றும் கூடுதல் பிரிவுகள் துவங்க, இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குவதற்கு, 2026 - -27ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

கடந்த 2ம் தேதி முதல், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும், ஒரே விண்ணப்பத்தில் மட்டும் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் 5,000 மற்றும் ஆய்வு கட்டணம் 8,000 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை, பிப்., 28ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

கூடுதல் விபரம் பெற உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ, dstotvlr2025@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 88385 22794, 94441 39373 ஆகிய மொபைல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement