விருதுநகர் மாவட்டத்தில் 2025ல் 26 போக்சோ வழக்குகளில் தண்டனை

1

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் 2025 ல் 26 போக்சோ வழக்குகளில் தண்டனை கிடைக்க தொடர் முயற்சி மேற்கொண்ட போலீசாருக்கு தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி பாராட்டு தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆண்டு தோறும் 200-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பல வழக்குகள் ஓராண்டிற்குள் நடத்தி முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப் படுகிறது.

2025ல் விருதுநகர் மாவட்ட போலீசாரின் தொடர் முயற்சியால் 26 போக்சோ வழக்குகளில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று சிவகாசி மகளிர் போலீசார் பதிவு செய்த போக்சோ வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராமருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, நீதி வழக்குகளில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்துவதை நிரூபிக்கிறது என மாவட்ட போலீசாருக்கு தென்மண்டல ஜ.ஜி., விஜயேந்திரபிதாரி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement