சிக்கிக்கொண்ட கால் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மதுரை: மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் முனியம்மாள் 66. நேற்று மதியம் வீட்டின் கழிவறைக்கு சென்றபோது வழுக்கி வலது கால் கோப்பைக்குள் சிக்கிக்கொண்டது.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் அனுப்பானடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில், வீரர்கள் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், ரவிக்குமார், முருகன் கோ.சிவகுமார், முருகேஸ்வரன், பிரேம்குமார் ஆகியோர் கடப்பாரை, சுத்தியல் பயன்படுத்தி கோப்பையை உடைத்து எவ்வித காயமுமின்றி முனியம்மாளை மீட்டனர்.

Advertisement