நீரா பானம் தயாரிப்பு மாணவியருக்கு பயிற்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசுவில், வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், நீரா பானம் தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்றனர்.

பொள்ளாச்சி அருகே, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியரின் கிராம தங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவம்பாடிவலசு விநாயகா தென்னை உற்பத்தி நிலையத்துக்கு சென்றனர்.

அங்கு, நீரா பானம் தயாரிப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் பெற்றனர். மேலும், தென்னை பாளையில் இருந்து எடுக்கப்படும் நீரா பானம், நிறைய ஊட்டச்சத்துக்களை கொண்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நீரா பானம் கெடாமல் இருக்க எவ்வாறு பாதுகாப்பாக பதப்படுத்தப்படுகிறது. மரங்களில் இருந்து எந்த முறையில் பானம் இறக்கப்படுகிறது என்பது குறித்தும் மாணவியருக்கு விவசாயிகள் விளக்கமளித்தனர்.

Advertisement