பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது; கவுன்டவுன் தொடக்கம்
ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் இன்று(ஜன.,12) விண்ணில் பாய உள்ள நிலையில் அதற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது.
புவியை கண்காணிக்கும், இ.ஓ.எஸ்., - என்1 உட்பட, 18 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட், ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இன்று ( ஜனவரி 12) காலை 10:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதில், சென்னையைச் சேர்ந்த விண்வெளி துறை, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'ஆர்பிட்எய்டு ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் 'ஆயுள்சாட்' செயற்கைக்கோளும் ஒன்று.
இந்நிறுவனம், புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோளுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பும் தீர்வுகளுடன், விண்வெளியில் எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்எல்வி-சி62 / இஓஎஸ்-என்1 திட்டம், 2026ம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் ஏவுதல் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தத் திட்டத்திற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. கடைசி நேர பணிகளையும், ராக்கெட்டின் செயல்பாடுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ALL THE BEST ISRO.மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்