அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்தது செல்லாது; தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

22

சென்னை: பாமக பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அன்புமணி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.


@3brபாமகவில் தந்தை ராமதாஸ் - மகன் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால், இரு அணிகளாக பாமகவில் செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்துவிட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த ராமதாஸ், வேறு எந்த கட்சியுடன் கூட்டணியில் சேரலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், திமுக ஆட்சியை புகழ்ந்தும் பேசி வருகிறார்.




இந்த நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமைக்கு இல்லை எனக் கூறி தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அன்புமணி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



அவரது கடிதத்தில்; பாமக பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அன்புமணி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமக தலைவர் என அன்புமணி உரிமை கோர முடியாது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமைக்கு இல்லை. எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி குறித்து அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியது சட்டவிரோதமானது. அவரது செயல்பாடு பாமகவின் அமைப்பு சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மோசடி செயல்களில் ஈடுபட்டு தலைவர் பதவி காலத்தை அன்புமணி நீட்டித்துக் கொண்டார்.

அன்புமணி கட்சித் தலைவராக இருந்த போது தேர்தலில் தோல்வி அடைந்ததால் பாமக அங்கீகாரத்தை இழந்தது. அன்புமணியை பாமக தலைவராக நீட்டித்ததற்கு எதிரான வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நான் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அனுமதியின்றி பாமக பெயரை அன்புமணி பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்ய வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



மேலும், இந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமல்லாது, உள்துறை செயலர் மற்றும் தமிழக டிஜிபிக்கும் ராமதாஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement