வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு ஹிந்து இளைஞர் கொலை

18

டாக்கா: வங்கத்தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், ஹிந்து ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.


வங்கதேசத்தில் சிறுபான்மையினராக ஹிந்துக்கள் மீதான தாக்குதல் காரணமாக அங்கு தொடர்ந்த பதற்றமான சூழல் காணப்படுகிறது. தற்போது அமைதியற்ற நிலைமை காணப்படும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக ஹிந்து ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு இருக்கிறார். இவர் ஆட்டோ டிரைவர் என்றும், 28 வயதான சமீர் தாஸ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கார்த்திக் குமார் தாஸ், ரினா ராணி தம்பதியின் மூத்த மகன் சமீர் என்று தெரியவந்துள்ளது. இவரை மர்ம கும்பல் கொலை செய்து விட்டு, ஆட்டோவை திருடி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சமீர் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தொடரும் அநீதி




வங்கதேசத்தில் வன்முறை மீண்டும் தலை தூக்கிய பிறகு, முதலில் மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், 30, என்ற இளைஞர் மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அப்போதும் விடாத காட்டுமிராண்டி கும்பல் சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.


பின்னர் தொடர்ந்து ஹிந்துக்கள் கொல்லப்படும் சம்பவம் அரங்கேறியது. தற்போது ஆட்டோ டிரைவர் சமீர் மரணத்தை தொடர்ந்து வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துகள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement