பிரதமர் கூட்டத்திற்கு மதுரையில் இடம் தேர்வு: பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்து ஆய்வு

1

மதுரை: தமிழகத்திற்கு ஜன.23ல் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் தே.ஜ., கூட்டணி சார்பில் ரிங் ரோட்டில் பொதுக் கூட்டம் நடத்தும் இடம் குறித்து பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் இணைந்து ஆய்வு செய்தனர்.

சென்னை அல்லது திருச்சி அல்லது மதுரையில் இக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக நேற்று காலை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை வந்தார். மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், முன்னாள் தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பொதுச் செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், ராமசீனிவாசன், செயலாளர் கதலிநரசிங்க பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சசிராமன், ராஜரத்தினம், ஏ.ஆர்.மகாலட்சுமி, மாநில கூட்டுறவு தலைவர் மகாசுசீந்திரன், ஆன்மிக பிரிவு செயலாளர் சிவபிரபாகர், முன்னாள் எம்.பி., சசிகலாபுஷ்பா, நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தி, விவசாய அணி சசிராமன், கலை, கலாசார பிரிவு செயலாளர் சசி குமார் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மாநில ஐ.டி.விங்க் செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Advertisement