அரசுப்பள்ளிகளில் தினமும் இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்; ராஜஸ்தானில் உத்தரவு
நமது நிருபர்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தினசரி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்ற நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் குறைந்தது தினமும் இரண்டு செய்தித்தாள்கள் வாங்க வேண்டும்.
அது ஒன்று ஆங்கில மொழியிலும், மற்றொன்று ஹிந்தி மொழியிலும் இருக்க வேண்டும். காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது செய்தித்தாளை வாசிக்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் கிருஷ்ணா குணால் அரசு பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தலையங்கங்கள், விளையாட்டு, தேசிய மற்றும் உலக செய்திகளை படிக்க வேண்டும்.
காலையில் பிராரத்தனை கூட்டத்தின் போது அன்றைய தினம் செய்தித்தாள் வாசிக்கும் மாணவர் பள்ளிக்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வந்து தயாராக வேண்டும். மாணவர்களுக்கு தினமும் கூடுதலாக 5 புதிய சொற்கள் மற்றும் அவற்றின் விளக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய தலையங்கங்கள் மற்றும் செய்திகளை படிக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன பலன்?
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த புதிய நடைமுறை மாணவர்களிடம் செய்திகளை படித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும். அவர்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள பேருதவியாக இருக்கும். மாணவர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும். மாணவர்களை விழிப்புணர்வு, சிந்தனை மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்கான முக்கியமான முயற்சி இது. இந்த முயற்சி மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதே போன்ற செய்தி உபி பற்றி வரும்போது ஒரு வண்டி கழுவும் அடிமை குறிப்பிட்டது நினைவிலுள்ளது .... தமிழகத்தில் இந்த நடவடிக்கை ஏற்கனவே உள்ளதாம் .....
கல்வியறிவில் தமிழ்நாட்டை ராஜஸ்தானுடன் ஒப்பிடும் தங்கள் அறிவே அறிவு... தங்கள் குழந்தைகளை ராஜஸ்தானில் படிக்க வைக்கலாமே. ஹிந்தியும் கற்றுக்கொண்டதுபோல் ஆகும்
தமிழன்..உனக்கு தெரியுமா தமிழ் தேர்வில் எத்தனை பேரு ஃபெயில் என்று....வெட்கம் இல்லையா
டமில் நாடு முன்னேறிய மாநிலம். கடைக்கு போடாமல் கட்டி வைத்திருக்கும் பழைய பேப்பர் அண்ணா படிப்பகம் மற்றும் பெரியார் படிப்பகங்களில் அழகாக மேஜை மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நல்ல வேளை படிப்பகங்களை திராவிட மூடல் அரசு பிரியாணி கடை நடத்தும் க உ பீஸ்களுக்கு வாடகைக்கு விடலை. முன்னேறிய மாநிலத்துக்கு படிப்பகம் எதுக்கு?
மொபைல் காலத்தில் வாசிக்கின்ற பழக்கம் முழுவதுமாக காணாமல் போய்விட்டது நல்ல முயற்சி ராஜஸ்தான் அரசுக்கு நல் வாழ்த்துக்கள், எல்லா மாநிலங்களிலும் அமல் படுத்த வேண்டும்
தமிழகத்தில் செய்தி தாள்
வாசிப்பு நடக்க கூடாது..
நடக்க விட மாட்டோம்..
அதனை மீறி படிக்க
வழங்கலாம்..
நல்ல வேளை. டமில் நாட்டில் இல்லை.ராஜஸ்தானில் இந்த உத்தரவு.டமில் நாட்டுல அப்புடி யெல்லாம் பண்ணிப்புட்டா நிலமை என்னா ஆகும். மக்களை முட்டாளாக வச்சிருந்தா தான் அடிக்குற கொள்ளையை முழுசா அடிக்கலாம்.
வெளிநாடுகளில் கம்ப்யூட்டர் மூலம் செய்தித்தாள் வாசக சாலைகளில் படிக்கிறார்கள் .இதனால் பேப்பர் பயன்பாடு குறைகிறது .
Please also make
Moral class compulsory and teach them daily the cleanliness like not to pee in public / not to spit in public places / not to throw papers & plastic in public placesமேலும்
-
மீண்டும் கில், ஸ்ரேயாஸ் ஐயர்... நியூசி.,தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
-
பயணிகளின் வசதி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்; அஷ்வினி வைஷ்ணவ்
-
காலையில் சர்ர்... மாலையில் விர்ர்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
வெனிசுலா மீதான அமெரிக்கப்படை தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான் கண்டனம்
-
அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் சுற்றுப் பயணம்; இபிஎஸ் அறிவிப்பு
-
திமுக அரசு எப்போதும் உண்மையாக இருக்கும்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்