அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் சுற்றுப் பயணம்; இபிஎஸ் அறிவிப்பு
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் மண்டல வாரியாக ஜனவரி 7 முதல் ஜனவரி 20 வரை மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் இ பி எஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில், பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் பொருட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும், வரும் ஜனவரி 7ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.
* ஜனவரி 7ம் தேதி- வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை, சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி.
* ஜனவரி 8ம் தேதி- விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை.
* ஜனவரி 9ம் தேதி- தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம்.
* ஜனவரி 11ம் தேதி- மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
* ஜனவரி 19ம் தேதி- கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி.
* ஜனவரி 20ம் தேதி- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
எந்த ஓர் தலைவர்/லெட்டர் பாட் கட்சியைக்கூட விடாமல் அரவணைத்து வெற்றி பெற்றேயாக ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஆனால் தன் கட்சி தோற்றாலும் கட்சி கஜானா/பதவி கையை விட்டு போய்விடக் கூடாது என்று செயல் படுகிறரர்.
கருணா திமுக அறுதி பெரும்பான்மை நம்பிக்கை இழந்து விட்டது. காரணம் விஜய், சீமான், சிறுத்தை,காங்கிரஸ் கோஷ்டி மற்றும் திமுக உள்கட்சி பூசல். அண்ணா திமுக என்ன தேர்தல் அறிக்கை தயாரித்தாலும் மக்கள் வெற்றி பெற செய்ய போவது இல்லை. எடப்பாடி பேராசையால் அறிய வெற்றி வாய்ப்பு நழுவும். காங்கிரஸ் இல்லாமல் திமுக, பிஜேபி இல்லாமல் எடப்பாடி சட்ட பேரவை வாசல் வரை தான் செல்ல முடியும். வெற்றி பெற்றால் கூட அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி புரிவது கடினம். போட்ட பணம் எளிதில் ஊழல் செய்து திரும்ப பெற முடியாது.
மாவட்டச் செயலாளர்கள் இருக்காங்களே, அவங்க குறைகளைக் கேட்டு அறிக்கை கொடுக்க மாட்டாங்களா ???? அவ்வளவு ஏன், நீங்களே பிரச்சார சுற்றுப்பயணம் போறீங்களே .... உங்க கூட வந்தவங்க ரெடி பண்ண மாட்டாங்களா ????
பயணம் மேற்கொண்டு என்ன செய்வது ஆட்சிக்கு வர வேண்டுமேமேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை