ரஷ்யாவில் 'பேஷன் டிசைன்' கண்காட்சி: திருப்பூருக்கு புதிய ஆர்டர் கிடைக்க வாய்ப்பு
திருப்பூர்: அமெரிக்க சந்தைக்கு மாற்றான, வலுவான சந்தையை கைப்பற்ற, ரஷ்யா 'பேஷன் டிசைன்' கண்காட்சியை பயன்படுத்தி, புதிய ஆர்டர்களை பெறலாம் என, ஏ.இ.பி.சி., எனப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அறிவித்துள்ளது.
உலகளாவிய ஆயத்த ஆடை சந்தையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக, வலுவான சந்தையாக ரஷ்யா இருக்கிறது. ஆண்டுக்கு, 70,000 கோடி ரூபாய்க்கு ஆடை இறக்குமதி செய்கிறது. ரஷ்ய ஆடை ஏற்றுமதியில், 44 சதவீத பங்களிப்புடன் சீனா முதலிடத்தில் இருக்கிறது. உஸ்பெகிஸ்தான், இரண்டாவது இடத்தில் உள்ளது.
வியட்நாம், இத்தாலி, துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளை கடந்து, இந்தியா 10ம் இடத்தில் இருந்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு, 862 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.
ரஷ்ய சந்தையில் சாதகமான வாய்ப்பு இல்லாத நிலையிலும், முந்தைய ஆண்டை காட்டிலும், இந்திய ஏற்றுமதி வர்த்தகம், இருமடங்கு அதிகரித்து உள்ளது. அமெரிக்காவுடன், புதிய வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் வரை, மாற்று சந்தை வாய்ப்புகளை ஆர்டராக மாற்ற, தொழில்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஆடை உற்பத்தி வாயிலாக, ரஷ்யாவிலும் புதிய ஆர்டர்களை கைப்பற்ற முடியும் என கருதுகின்றனர்.
அமெரிக்காவுக்கு மாற்றாக புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க ஏதுவாக, ரஷ்யாவில் நடக்கும் சர்வதேச கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாகிகள் கூறுகையில், 'மாஸ்கோவில் இயங்கும் குரோகஸ் கண்காட்சி அரங்கில், பிப்., 17ல் துவங்கி நான்கு நாட்களுக்கு, ரஷ்யாவில் சர்வதேச பேஷன் டிசைன் கண்காட்சி நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்ய நாட்டுக்கு ஆடை ஏற்றுமதி வ ளர்ச்சி பெற்று வருகிறது.
வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை வளர்ந்த நாடுகள் அதிகம் விரும்புகின்றன. அமெரிக்க சந்தைக்கு மாற்றாக, புதிய சந்தையை கைப்பற்ற நினைக்கும் இந்திய ஏற்றுமதியாளர்கள், ரஷ்ய கண்காட்சியை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றனர்.
@block_Y@ரஷ்யாவுக்கு ஆடை ஏற்றுமதி
ஆண்டு - ரூபாயில்
2020 - ரூ.471 கோடி
2021 - ரூ.557 கோடி
2022 - ரூ.248 கோடி
2023 - ரூ.350 கோடி
2024 - ரூ.862 கோடிblock_Y
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது