சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், 38வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்தது.
ஊர்வலத்தை போக்குவரத்து துறை துணை ஆணையர் வினயராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவ், புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரி ராமேஷ், உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன் ஆகியோர் கொடியசதை்து துவக்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள், வாகன ஆய்வாளர்கள், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அமலாக்க உதவியாளர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம், காந்தி சிலையில் துவங்கி எஸ்.வி.படேல் சாலை, அண்ணா சாலை, புஸ்ஸி வீதி வழியாக மீண்டும் காந்தி சிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை
Advertisement
Advertisement