ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை 

புதுச்சேரி: சி.எம்.ஏ., தேர்வில் புதுச்சேரி ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

சி.எம்.ஏ., அடித்தள தேர்வை இந்திய ஐ.சி.எம்.ஏ.ஐ., மற்றும் ஐ.சி.டபிள்யூ., ஏ.ஐ., நிறுவனம் கடந்த மாதம் நடத்தியது. இத்தேர்வில் புதுச்சேரி ஆதித்யா கல்லுாரி பி.காம்., முதலாமாண்டு படிக்கும் 39 மாணவர்கள், பி.காம்., இரண்டாமாண்டு படிக்கும் 2 மாணவர்கள் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றனர்.

மாணவிகள் ஸ்ரீஹரிணி 400 மதிப்பெண்களுக்கு 316, கிருத்திகா 294, லக் ஷணா 288 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களை ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயண அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

கல்லுாரி நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், 'புதுச்சேரி, ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நவீன காலத்திற்கு ஏற்ப உயர் கல்வியில் பல மாற்றங்களை கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மற்றும் எம்.எல்., டேட்டா சயின்ஸ், விஷ்வல் கம்யூனிகேஷன், பாடங்களைத் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இணையாக நடத்தி வருகிறது. மேலும் இளங்கலை பட்டத்தோடு மாணவர்களுக்கு மைனர் டிகிரி பெறுவதற்கு பயிற்சி தரப்படுகிறது.

இங்கு வணிகவியல் பாடத்துடன் இளங்கலை பட்டத்தோடு ஒருங்கிணைந்த சி.ஏ., - சி.எம்.ஏ., - ஏ.சி.சி.ஏ., உள்ளிட்ட புரபஷனல் கல்விக்கான பாடங்களும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

Advertisement