தமிழ் மொழி தொழில்நுட்ப தீர்வு 'ஸ்டார்ட் அப்'க்கு நிதியுதவி

சென்னை:தமிழ் மொழி தொழில்நுட்பம் சார்ந்து, புதுமையான தீர்வுகளை உருவாக்கும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, மொழி தொழில்நுட்ப புத்தாக்க நிதி திட்டத்தின் கீழ், தமிழக அரசு நிதியுதவி வழங்க உள்ளது.

இத்திட்டத்தை தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், தமிழக இணைய கல்வி கழகம் இணைந்து செயல்படுத்துகின்றன.

தமிழில் உலகத்தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் உருவாக்கம், இயந்திர மொழி பெயர்ப்பு, குரல் வழி உரையாடுதல், தமிழ் பேச்சறிதல், பொருள் அறிதல், மறு ஆக்கம் செய்தல் போன்ற கருவிகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

நிதியுதவி பெற விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வரும், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விபரங்களை, 'form.startuptn.in/LTF' தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement