விவசாய நலத்திட்ட நிதியை விரைந்து செலவிட அறிவுறுத்தல்

புதுடில்லி: விவசாய நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை, விரைந்து செலவிடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவுறுத்தியுள்ளார்.

டில்லியில் மாநில வேளாண் அமைச்சர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். நிர்வாக சிக்கல்களை தவிர்க்க, வரும் மார்ச் மாதத்துக்குள் அந்தந்த திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிதியை உரிய நேரத்தில் செலவிடாவிட்டால், அது மாநிலங்களுக்கே இழப்பாக அமைவதோடு, மத்திய அரசு அடுத்தகட்ட நிதியை விடுவிப்பதிலும் தாமதம் ஏற்படும் என எச்சரித்தார்.

பி.எம்., கிசான் திட்டத்தின் பயனாளிகள் சரிபார்ப்பு, பயிர் காப்பீட்டு திட்ட விரிவாக்கம் மற்றும் விதை, உரம் கையிருப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவசாய துறையை வலுப்படுத்தவும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

Advertisement