மக்களின் கூடவே இருப்பது தி.மு.க, தான்

அருப்புக்கோட்டை: ''மக்கள் நலனில் அக்கறை கொண்டு என்றைக்கும் மக்களுடன் இருப்பது திமுக., தான்'' என அருப்புக்கோட்டையில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பசும்பொன் நகரில் ரூ.13.0 லட்சம் நிதியில் புதிய ரேஷன் கடை திறப்பு , காமராஜர் நகரில் ரூ.4.40 கோடியில் பேவர் பிளாக் பதித்தல் ,அத்திப்பட்டி பெத்தம்மாள் நகரில் ரூ.80 லட்சம் நிதியில் பேவர் பிளாக், வாறுகால் அடிக்கல் நாட்டு விழா,கஞ்சநாயக்கன்பட்டி ஜெயா நகரில் ரூ.75 லட்சம் நிதியில் பேவர் பிளாக் வாறுகால் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது : மக்கள் நலனின் அக்கறை கொண்டு என்றைக்கும் மக்களுடன் இருப்பது தி.மு.க., தான் . அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் மாவட்ட நிதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், முகாமில் பதிவு செய்த ரசீதை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் காண்பித்து கேட்கப்படும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம், என்று பேசினார்.

உடன் அரசு அதிகாரிகள், திமுக., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement