திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர்: அமித் ஷா தமிழில் பதிவு

36

சென்னை: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.


@1brதமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை அமித்ஷா தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவர் புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் தமிழில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.



பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழகத்தின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Advertisement