அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
கவுகாத்தி: அசாமில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியது. கட்டங்கள் லேசாக குலுங்கியதால், கடும் குளிர், பனியையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர்.
இந்தியாவில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அதிக நிலநடுக்கம் ஏற்படும் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4.17 மணியளவில் அசாமின் மோரிகோன் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது.
மோரிகோன் மாவட்டம் மட்டுமல்லாமல், அருகே உள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பீதியில், கடும் குளிர், பனியையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரையில் எந்த தகவலும் இல்லை.
மேலும்
-
குளத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம்
-
தேசிய திறனாய்வு தேர்வு 5,892 பேர் பங்கேற்பு
-
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி விருத்தாசலம் அருகே சோகம்
-
கடும் நெருக்கடியில் முந்திரி தொழில் மத்திய அரசு தீர்வு காண கோரிக்கை
-
மகள் மாயம் தாய் புகார்
-
பெட்டி கடைக்காரரிடம் ரூ.7.61 லட்சம் அபேஸ் கன்னியாகுமரியில் மோசடி ஆசாமி கைது