கோகைன் கடத்தல்; நைஜீரியாவில் இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது

3

அபுஜா: சட்டவிரோதமாக 31.5 கிலோ கோகைன் போதைப்பொருளை கடத்தியதாக இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேரை நைஜீரியா அரசு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐரோப்பிய மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி மையமாக நைஜீரியா இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நைஜீரியா அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கடந்த ஜனவரி 2ம் தேதி மார்ஷல் தீவுகளில் இருந்து சென்ற எம்வி அருணா ஹூலியா என்ற இந்தியக் கப்பல் லாகோஸ் துறைமுகத்திற்கு வந்தது. அந்தக் கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 31.5 கிலோ எடையுள்ள கோகைன் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலில் இருந்து லாகோஸ் துறைமுகத்திற்கு 20 கிலோ கோகைன் கடத்தி வந்த 20 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement