மோடி நல்லவர்; நான் மகிழ்ச்சியுடன் இல்லை என்பது அவருக்கு தெரியும்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்

27

வாஷிங்டன்: ''பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர், ஒரு நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தியா என்னை மகிழ்ச்சி அடைய செய்ய விரும்பியது. மோடி மிகவும் நல்லவர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலையை விட இந்தியா மீதான வரிகளை எங்களால் உயர்த்த முடியும்.

பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். அவர் நல்லவர். ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது. ரஷ்ய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் உண்மையில் மோசமாக இருப்பது வெனிசுலா பொருளாதாரம். நான் இதுவரை பார்த்ததிலேயே மோசமான பொருளாதாரம் என்று நான் நினைக்கிறேன்.

ரஷ்ய ட்ரோன் கதை பொய்!




சமீபத்தில் ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார்.


புடினின் வீட்டை குறி வைத்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரஷ்ய ராணுவம் கூறியிருந்தது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்து இருந்தார்.


தற்போது உக்ரைன் புடினின் வீட்டை ட்ரோன் தாக்குதலில் குறிவைத்ததாக ரஷ்யாவின் கூற்றை அதிபர் டிரம்ப் நிராகரித்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ''ரஷ்ய ட்ரோன் கதை பொய். ரஷ்ய அதிபர் புடின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தவில்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துவிட்டனர்'' என்றார்.

Advertisement