2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த தயாராகி வருகிறது இந்தியா: பிரதமர் மோடி
புதுடில்லி: ''2030ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த முழு பலத்துடன் இந்தியா தயாராகி வருகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கும் வாலிபால் போட்டிக்கு இடையே பல தொடர்புகள் உள்ளன. வாலிபால் ஒரு சாதாரண போட்டி அல்ல. அது சமமாக அணியினர் அனைவரும் இணைந்து விளையாடக் கூடியது.
அனைத்து வீரர்களும் ஒரு அணிக்காக விளையாடுவதால், வாலிபால் போட்டி அணிக்கு முன்னுரிமை என்பதை எடுத்துரைக்கிறது. இந்த விளையாட்டு போட்டி எந்த வெற்றியையும் தனியாக அடைய முடியாது என்பதை நமக்கு கற்பிக்கிறது. அணி வெற்றி பெறும் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள். நாம் இணைந்து செயல்பட்டு வருவதால் இந்தியா முன்னேறி வருகிறது. 2030ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த முழு பலத்துடன் இந்தியா தயாராகி வருகிறது.
வாரணாசியில் தேசிய வாலிபால் போட்டியை நடத்துவது நகரத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. வாரணாசியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் வாரணாசிக்கு வர வேண்டும் என்று பழமொழி உண்டு. இப்பொழுது நீங்கள் அனைவரும் வாரணாசிக்கு வந்து இருப்பதால் அதன் கலாசாரத்தை புரிந்து கொள்வீர்கள். 2014ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்காக உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புது வடை
வாழ்த்துக்கள்மேலும்
-
அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
-
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
-
கோகைன் கடத்தல்; நைஜீரியாவில் இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
மோடி நல்லவர்; நான் மகிழ்ச்சியுடன் இல்லை என்பது அவருக்கு தெரியும்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
அமெரிக்காவில் இந்தியப்பெண் குத்திக்கொலை; வாலிபருக்கு வலை