வெனிசுலாவில் நிகழ்ந்ததைப் போல பாகிஸ்தானில்.... பிரதமர் மோடிக்கு ஓவைசி வலியுறுத்தல்
மும்பை:
வெனிசுலாவில் நடந்ததைப் போல, பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி, மும்பை
தாக்குதல் பயங்கரவாதி மசூத் அசாரை சிறைபிடிக்க வேண்டும் என்று பிரதமர்
மோடிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருட்கள்
கடத்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ்
மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து, புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளது.
நேற்றைய தினம் சரியான திட்டமிடலுடன், வெனிசுலாவுக்குள் நுழைந்து,
பாதுகாவலர்களை சுட்டு வீழ்த்தி, அதிபர் மதுரோவையும், அவரது மனைவியையும்
சிறைபிடித்தது.
சிறையில் அடைக்க அமெரிக்க
அதிகாரிகள் நிக்கோலஸ் மதுரோவை அழைத்து செல்லும் வீடியோக்கள் தொடர்ந்து
வெளியாகி வருகின்றன. வெனிசுலாவில் நடந்த சம்பவத்திற்கு ரஷ்யா, சீனா, ஈரான்
உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா
தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த
நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலை நடத்திய போல, பாகிஸ்தானுக்கு
ராணுவத்தை அனுப்பி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி மசூத் அசாரை சிறைபிடிக்க
வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி
வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடந்த
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ராணுவத்தை
வெனிசுலாவுக்கு அனுப்பி, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்த செய்தியை
நாம் அறிவோம். வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்நாட்டு அதிபரை அமெரிக்கா
சிறைபிடித்ததைப் போல, பாகிஸ்தானுக்கு ராணுவத்தை பிரதமர் மோடி அனுப்ப
வேண்டும். மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார்
மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதிகளை சிறைபிடித்து
கொண்டு வர வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் இதை செய்ய முடிகிறது
என்றால், பிரதமர் மோடியாலும் இதை செய்ய முடியும், இவ்வாறு அவர் கூறினார்.
நிதர்சன உண்மை ஒரு நாள் பாகிஸ்தானிக்கும் வெனிசுல போன்று அமெரிக்கா-வால் அரங்கேற்ற படும்...
அப்படி போடு. ஒவைசியை இந்தியவின் பாகிஸ்தானின் தூதரக நியமிக்கணும். ஒவைசி போல் பேச்சு திறமை உள்ளவர் அதுவும் ஒரு இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு சென்று நல்லுரைவை ஏற்படுத்தனும் . இது நடந்தால் இஸ்லாமிய உலகம், இந்திய என்ற நாடு நாடுகள் இஸ்லாமியர்களை எவ்வாறு மதிக்கிறார்கள் என்று அறிவார்கள்.
சும்மா உசுப்பேற்றிவிட்டு வேடிக்கை பார்க்க முனைகிறார். அப்படியே ஏதாவது தாக்குதல் நடந்தாலும் முதலில் இது முஸ்லிம்களுக்கு எதிரான ஆர் எஸ் எஸ் பி ஜெ பி கூட்டு சதி என்று கண்டன அறிக்கையுடன் இவரும் ராகுல் காந்தியும் தயாராக இருப்பார்கள். இப்போது கொம்பு சீவி விடுகிறார் .
சரியான கருத்து . அணைத்து இந்தியர்களும் இது தான் நினைத்தார்கள்
வெனிசுலாவில் நிகழ்ந்ததைப் போல பாகிஸ்தானில்.... பிரதமர் மோடிக்கு ஓவைசி வலியுறுத்தல். ஒவைசி நல்ல காமெடியை பண்ணுகிறார். பாகிஸ்தான் வேண்டாம் ஒவைசி - தமிழகத்தை பாருங்கள் .நீதிமன்றம் தீர்ப்பளித்தும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற , ஹிந்துக்களால் , முடியவில்லை .இத்தனைக்கும் திருப்பரங்குன்றம் பாகிஸ்தானில் இல்லை .அது மட்டுமா கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலைய சுவாமி திரும்கோயில் தேரோட்டம் போன மாதம் நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியின்போது பக்தர்கள் சிலர், ஜெய் காளி மாகாளி ,பாரத்மாதாகீ ஜெய் என்றும், வீரசிவாஜீக்கு ஜெய், எனவும் கோஷம் எழுப்பினர்.இது வழக்கம் என அந்த ஊர் மக்கள் சொல்லியும் , டென்சனான அமைச்சர் சேகர் பாபு, "சோத்தைத் திங்கிரியா இல்லை... திங்கிறியா" எனக் கேட்டு கொந்தளித்தார். ஒவைசி தமிழ்நாட்டில் பாரத்மாதாகீ ஜெய் பிரிவினைவாத சொல்லாக திராவிட தலைவர்கள் பிரகடப்படுத்தி விட்டனர் .இது தான் உண்மை .பாகிஸ்தானை வெற்றி கொள்ளும் பிரதமர் மோடியால் தமிழகத்தை திருத்த முடியாது .திராவிட போதை ,பெரியார் போதை ,விடியல் போதை ,போலி பகுத்தறிவு போதை ,போலி சனாதன எதிர்ப்பு போதை ,போலி மதசார்பின்மை போதை ,போலி சமத்துவ அரசு போதை என அரச நாக நஞ்சை விட கொடிய போதையில் சிக்கி தமிழகம் கையறு நிலையில் உள்ளது
எங்கேயோ இடிக்குதே. மும்பை குண்டு வெடிப்பு நடந்து 17 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் இவருக்கு ஞானோதயம் வருகிறதா.
ஒவைசியின் ஆசை விரைவில் நிறைவேறும்
இது பேருதான் போட்டு வாங்குவது என்று அர்த்தம். மோடி அரசை ஒழிக்க இது போல் உசிப்பி இஸ்லாமிய, வளைகுடா நாடுகளில் பகையை உருவாக்க ஓவைசி நினைக்கிறார். மோடி சார் ஏமாற வேண்டாம்
ஏகப்பட்ட அமெரிக்கா, மற்றும் சீனா கைக்கூலிகள், அரசு நிர்வாகத்தில், காவல் துறையில், ராணுவ நிர்வாகத்தில் உள்ளனர். இவர்களை ஒழித்தாலே எதிரி நாடுகள், அமெரிக்கா உட்பட அடங்கி போவார்கள்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, முதுகில் குத்தும் குணம் உள்ளவன். பங்களாதேஷி ஹிந்துக்கள் உயிரோடு எரிக்கப்படுவதை பற்றி ஒரு கருத்து சொன்னானா? எதாவது ஒன்று அதை எதிர்த்து கருத்து சொன்னார்களா? இதுதான் மர்ம நபர்களின் உண்மை முகம்.மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு
-
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது; அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது
-
வங்கதேச கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி; புள்ளிகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கை
-
ஆட்சியில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இல்லை; சொல்கிறார் வெனிசுலா இடைக்கால தலைவர்
-
விஜயை சந்தித்தது உண்மைதான்; கூட்டணியை தலைமை முடிவு செய்யும்; சொல்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி
-
வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர்; கால்வாயிலில் குதித்து உயிரிழந்த சோகம்!