சென்னையில் காலையில் உயர்ந்து மாலையில் சரிந்த தங்கம்; சவரனுக்கு ரூ.560 குறைவு
சென்னை: சென்னையில் இன்று காலையில் சற்றே உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சரவனுக்கு ரூ. 560 குறைந்து விற்பனையானது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜனவரி 05) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,01,440 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,02,080 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 266 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (ஜனவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 271 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 71 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
இன்று காலை (ஜனவரி 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந் நிலையில், மாலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்தது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,800 ஆகவும்,. ஒரு சவரன் ரூ. 1,02,400 ஆகவும் விற்பனையானது.
வெள்ளி விலையிலும் மாற்றம் காணப்படுகிறது. காலையில் கிராமுக்கு ரூ.12 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.277 ஆக விற்கப்பட்டது. ஒரு கிலோ ரூ.12,000 என்பது பிற்பகலில் ரூ.6000 குறைந்தது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.https://www.dinamalar.com/news/business-commodity
ரெண்டு நாள் பொறுங்க. 100 ரூவா விலை குறையும். ஒரு நாலு கிலோ வாங்கிப் போடுங்க.
தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழே வருவதற்கு வாய்ப்பு இருக்காமேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை