தமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது; அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ சந்தித்து பேசிய பிறகு நிருபர்கள் சந்திப்பில், ''அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது'' என அன்புமணி அறிவித்தார்.




அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: அன்புமணி தரப்பு பாமக உடன் நாங்கள் கூட்டணியை அமைத்து இருக்கிறோம். அதிமுக, பாமக கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள், தொண்டர்கள் விரும்பியவாறு கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்களது கூட்டணி வெற்றி கூட்டணி.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டத்தை கொடுக்கிற அரசு அமைய எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதற்கு எங்களது கூட்டணியில் அதிமுக, பாஜ, பாமக ஆகிய 3 கட்சிகளும் இணைந்து இரவு, பகல் பார்க்காமல் தேனீக்கள், எறும்புகள் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எங்களது கூட்டணியில் தற்போது பாமக இணைந்து இருக்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கையை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்பு அறிவிப்போம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
வலுவான கூட்டணி
அன்புமணி கூறியதாவது: அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க இணைந்து இருக்கிறது, எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். வலுவான கூட்டணி.
@quote@எங்களது நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கிற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்த்து இருக்கிறோம். quote
சமீபத்தில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட போது கிராமத்தில் மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்தோம். ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.
100% வெற்றி
இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது தேர்தலுக்கு இனி சூடுபிடிக்கும் அப்புறம் அடிபிடிக்கும்
அப்புறம் வாடகை வாய்க்கு இருநூறு வராது .. ஹி.. ஹி
Ok PMK 2 has come ...so another 1000 votes guaranteed. What is the use for TN to continue by dravidian ideology. BJP too a wrong decisions to ally with these jokers
ஸ்டாலின் அரசு தோல்வி தர்மத்தின் விதி. எனவே இனாம் பெற்று தி மு க விற்கு வாக்கு அளித்தவர்கள் இனாம் தொகையை திருப்பி அரசுக்கு அளித்தால் பாபத்தில் இருந்து விடுபடலாம் இந்த விதி 2031 தேர்தலுக்கும் பொருந்தும்.
234 தொகுதியிலும் இக்கூட்டணி மாபெரும் வெற்றி. தமாசு தமாசு
திமுக ஒரு பெட்டிக்கு அப்பா. அதிமுக ஒரு பெட்டிக்கு மகன். தேர்தலுக்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள்.
போச்சு. பாக்ஸ் போயிடிச்சு. சூட்கேஸ் கிடைச்சிடிச்சு.
தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காத NDA கூட்டணி ...
ஓவியரே. உனக்கு ஏன் இப்படி உதறல் எடுக்கிறது...
மும்பைக்கு அருகே மேயர் தேர்தலுக்கு பிஜேபி காங்கிரஸ் கூட்டணி ....
அம்பர்நாத்தில் BJP காங்கிரஸ் கூட்டணி ..அக்கோட் எனும் நகரில் BJP மற்றும் ஒவாய்சி கட்சியுடன் கூட்டணி …மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை