வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர்; கால்வாயிலில் குதித்து உயிரிழந்த சோகம்!

24

டாக்கா: வங்கதேசத்தில் தன்னை துரத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர் கால்வாயில் குதித்து உயிரிழந்தார்.


@1brவங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதில் இருந்து அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இத்தாக்குதல்கள் மிக கொடூரமாக மாறின. ஹிந்துக்கள் இளைஞர்கள் வன்முறை கும்பல்களால் அடித்தும், தீ வைத்து எரித்தும் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு டிசம்பர் 2 முதல் 35 நாட்களில், நாடு முழுதும், 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணங்கள் வெவ்வேறாக கூறப்பட்டாலும் அனைவரும் ஹிந்துக்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நவோகான் மாவட்டத்தின் மகாதேப்பூர் பகுதியில் சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.



தன்னை துரத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர் கால்வாயில் குதித்து உயிரிழந்தார். இவர் பந்தர்பூர் கிராமத்தை சேர்ந்த மிதுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement