விஜயை சந்தித்தது உண்மைதான்; கூட்டணியை தலைமை முடிவு செய்யும்; சொல்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி
சென்னை: ''தவெக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான். காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைமை முடிவு செய்யும்'' என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
கேள்வி: தவெக தலைவர் விஜயை சந்தித்தீர்களா, அந்த சந்திப்பு குறித்து ஏதாவது பேசப்பட்டதா? மறுபடியும் சந்திக்க வாய்ப்பு ஏதும் உள்ளதா?
பிரவீன் சக்கரவர்த்தி பதில்: சந்தித்தேன். அவ்வளவு தான் சொல்வேன்.
கேள்வி: தமிழகத்தை உத்தரபிரதேசம் உடன் ஒப்பிட்டு நிதிநிலை அறிக்கை குறித்து நீங்கள் வெளியிட்டது சர்ச்சை ஆகி உள்ளது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சர்ச்சை ஒன்றும் இல்லை. உத்தரபிரதேசம் பற்றி ஒப்பிடவில்லை. தமிழகத்தின் கடன் சூழ்நிலை பற்றி, ரிசர்வ் வங்கி என்ன சொல்லி இருக்கிறது என்று அது பற்றி தான் எடுத்து சொன்னேன். கருத்துக்கணிப்பு அவ்வளவு தான்.
கேள்வி: பல தலைவர்கள் உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டணி குறித்து உங்கள் கருத்து என்ன?
கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என நிருபர்கள் கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி பதில் அளித்தார்.
ஓட்டாக மாறுமா?
கோவையில் நிருபர்களிடம் பிரவீன் சக்கரவர்த்தி
கூறியதாவது: தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசினேன். அவ்வளவுதான். ஒரு
இரண்டு பேர் சந்திக்க கூடாதா? பிரவீன் சக்கரவர்த்திக்கு நிறைய அடையாளங்கள்
இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். டில்லியில் இதே போல நிறைய
பேரை சந்திக்கிறேன். தமிழகத்தில் தான் இப்படி கேட்கிறீர்கள். தமிழக
வெற்றிக்கழகம் குறித்து பிரிடிக்சன் தேவையில்லை. விஜய் கூட்டத்திற்கு
மக்கள் உற்சாகமாக வருகின்றனர். அது வெளிப்படையாக தெரிகிறது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு
அது
ஓட்டாக மாறுமா? மாறாதா ? என்பது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மக்கள் அவரை
நடிகராக பார்க்க வரவில்லை ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருகின்றனர். அதனால்
அந்த எண்ணம் தெரிகிறது. அவர் ஒரு சக்தியாக உருவாகிவிட்டார். தமிழகத்தில்
மூன்றே கோரிக்கைகள் தான். அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில்
பங்கு. இது காங்கிரஸ் தொண்டரின் கோரிக்கை.
காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக
எதிர்காலத்திற்காக கோரிக்கை. இதில் எந்த பிரச்னையும் இல்லை. எதற்கு
இந்த கோரிக்கை எழுகின்றது என்றால் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாகவே
போய்க்கொண்டு இருக்கிறது.தற்பொழுது பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சில எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஊட்டி
விடும் கையை யாராவது கிள்ளுவார்களா?
தலைமை முடிவு
யாருக்கு
என்ன கட்டுப்பாடு இருக்கிறது. அவர்கள் தொகுதியில் வேலை நடக்க வேண்டும்,
வழக்கு இருக்கிறது என ஏதாவது இருக்கலாம். காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள்
கோரிக்கையை வைக்கலாம் காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சி.
கோரிக்கைகள் வைக்கின்றனர். ஆனால் கடைசியில் தலைமை தான் முடிவு எடுக்கும்
இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
@block_B@
தனித்து போட்டியிடலாமே என சீமான் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், அதற்கு பதில் சொல்ல தேவையில்லை என பிரவீன் சக்கரவர்த்தி பதில் அளித்தார்.block_B
திமுகவிடம் பேரம் பேச விஜய்ண்ணாவை பயன்படுத்துறீங்க .....
இல்லை இல்லவே இல்லை உண்டு ஆனால் இல்லை
சத்தியமா செல்வப்பெருந்தகை அவரின் எஜமானர் சிதம்பரம் இருக்கற வரைக்கும் விஜய் கூட்டணி போட விடமாட்டார்கள் , காரணம் ஸ்டாலின் மற்றும் அவர் மகன் , ஸ்டாலின் தங்கை கனிமொழி இவர்களுக்கு அந்த ரகசியம் தெரியும்
தேர்தல் நேர அலப்பறைகள் இனி சூடுபிடிக்கும் அப்புறம் அடிபிடிக்கும் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்
If Congress walks out of DMK allaiance, it will end of congress in Tamil nadu.
If they think, by keeping Vijay, they can win in Kerala, kerala public doesnt vote based on Cinema isma.
The MPs who are articulating for allaince with Vijay is detrimental to congress.
In stead, these MPs should try to increase the vote share of congress.
All these 10 MPs have won based on DMK support, how they will win in 2019?
காங்கிரஸ், விஜய் ஒன்று சேர்ந்து கட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்த வேண்டிய சூழல். திமுகவுடன் நட்பு கட்சிகள், பிஜேபி, அண்ணா திமுக ஆதரவு கட்சிகள் தனித்து போட்டி. நாம் சைமன் மற்றும் சுயேட்சை ஓட்டை பிரிக்கும். திமுக சொல்வதை ஆதரவு கட்சிகள் கேட்கும். பிஜேபி சொல்வதை வெற்றி விளிம்பில் செல்ல எடப்பாடி பழனிசாமி அப்படியே கேட்க வேண்டும். தயங்கினால் தோல்வி உறுதி.மேலும்
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பல்கலையின் ரூ.140 கோடி சொத்துகள் முடக்கம்
-
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்தது
-
போதை பொருள் கடத்தலை தடுக்க பஸ், ரயில் நிலையங்களில் தனிப்படை