பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3000 டோக்கன் வினியோகம்: எங்கு, எப்படி பெறுவது? இதோ விவரம்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, பொங்கல் பரிசை சுமூகமாக பயனாளிகளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.
தலைநகர் சென்னையில், பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வினியோகிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த டோக்கனில் அவருக்கு பொங்கல் பரிசு அளிக்கப்படும் அல்லது பரிசுத் தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், ரேஷன் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், அட்டை எண், தெரு, டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பட்ட விவரங்களை பின்பற்றி, உரிய தேதியில், உரிய நேரத்தில் பயனாளிகள் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து பயனாளிகளுக்கும் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அளிக்க நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அனேகமாக ஜன.8 அல்லது ஜன.9ம் தேதி முதல் இவை வினியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
Usefull information on ponghal gift
ஐந்தாண்டுகளில் சுருட்டியதில் 0.5% அரைகாசை பொங்கல் பரிசாக தருகிறார்கள். வாங்கிக்கொள்ளுங்கள். ஓட்டை போடாதீர்கள். சென்ற தேர்தலில் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றியதுபோல் நீங்களும் ஏமாற்றி விடுங்கள்.
இந்த பரிசுத்தொகுப்பு திமுக கட்சி கொடுப்பது அல்ல மக்களே. பரிசுத்தொகுப்பு உங்கள் வரிப்பணத்தில் இருந்து உங்களுக்கே கொடுக்கப்படுவது. திமுகவின் தில்லாலங்கடி வேலையை புரிந்து கொள்ளுங்கள். ஏமாறாதீர்கள்.
தொலைக்காட்சி செய்தியில் முதல்வர் பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் காட்சி ஒளிபரபட்டது, அதில் பல இஸ்லாமியர்கள் கரும்பு உட்பட இந்த இலவசங்களை வாங்கிச்செல்வது காண்பிக்கப்பட்டது. அவர்களுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? கேட்டால் சமநீதி சமத்துவம் என்பார்கள், அவர்களுக்கு இலவசங்கள் கொடுக்கும்போது சமநீதி. அதே போல் நாகூர் தர்காவிற்கு இலவச சந்தனம், கஞ்சி கூழுக்காக இலவச அரிசி கொடுக்குபொழுது திருக்கோயில்களுக்கு என் கொடுக்கவில்லை? அப்போது சமூக நீதி சமத்துவம் எங்கே ஒளிகிறது?
then why give deepavali pongal other Hindu festival holidays to Muslims and Chtistians? why we hindus take id ul fitr leave.
Be sensible.religions can not be segregated for common matters like these
token la edhuku photo hihihiமேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு
-
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது; அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது
-
வங்கதேச கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி; புள்ளிகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கை
-
ஆட்சியில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இல்லை; சொல்கிறார் வெனிசுலா இடைக்கால தலைவர்
-
விஜயை சந்தித்தது உண்மைதான்; கூட்டணியை தலைமை முடிவு செய்யும்; சொல்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி
-
வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர்; கால்வாயிலில் குதித்து உயிரிழந்த சோகம்!