கிரீஸ் நாட்டை ஸ்தம்பிக்க வைத்த ரேடியோ அலைவரிசை செயலிழப்பு: விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
ஏதென்ஸ்: ரேடியோ அலைவரிசையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கிரீஸ் நாட்டில் விமான போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதுள்ளது. அனைத்து விமான சேவைகளும் எவ்வித முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கிரீஸ் நாட்டில் தினமும் ஏராளமான விமானங்கள் உலகின் பல நாடுகளுக்கு இயக்கப்படுகின்றன. இந் நிலையில் அங்கு திடீரென வானொலி அதிர்வுகளை பாதிக்கும் ரேடியோ அலைவரிசையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. ரேடியோ அலைவரிசையானது முற்றிலும் செயலிழந்து போக, அந்நாட்டின் ஒட்டு மொத்த விமான போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளன. அலைவரிசை செயலிழப்புக்கான காரணம் என்பது பற்றி அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே கிரீஸ் வரவேண்டிய விமானங்கள் அனைத்தும் அண்டை நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
பயணம் பற்றிய அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியிடப்படும். பயணத்தை தொடங்கும் முன்பாக அனைத்து வான்வெளியையும் கண்காணிக்குமாறும் அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.