எஸ்ஐஆர் பணிகளை உடனே நிறுத்த வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு மம்தா கடிதம்

4

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும். பெருமளவிலான மக்களின் வாக்குரிமைய இழக்க செய்கிறது என்று தேர்தல் கமிஷனை, முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.



மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. அந்த பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலின் படி 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.


பெயர்கள் நீக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கு வங்கத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பி உள்ளார்.


அதில், மாநிலத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும். பெருமளவிலான மக்களின் வாக்குரிமைய இழக்க செய்கிறது. இது நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு சரி செய்ய முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எஸ்ஐஆர் பணிகளில் சமரசம் செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் அடிப்படை அரசியலமைப்பை தாக்குகிறது.

இவ்வாறு கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

Advertisement