காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் புதிய உற்சவர் சிலை செய்ததில் நடந்த தங்க மோசடி வழக்கில், போலீசாரின் திருத்தப்பட்ட எப்.ஐ.ஆர்., மற்றும் ஐ.ஐ.டி., ஆய்வறிக்கை குறித்த விபரம், நீதிமன்றம் வாயிலாக மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிலைகள் செய்ய பக்தர்களிடம், 312 சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும், புதிதாக தயாரித்த உற்சவர் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்ற விபரமும் அம்பலமாகி உள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் உள்ள உற்சவர் சிலை தொன்மையானது. இச்சிலை, 2015ல் சேதமானதால், புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி ஆகிய இரு உற்சவர் சிலைகளை செய்ய, ஹிந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.
அதன்படி, சோமாஸ்கந்தர் சிலை மற்றும் ஏலவார்குழலி அம்மன் என, இரு உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. உற்சவர் சிலை செய்ததில் தங்க மோசடி நடந்திருப்பதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார், 2017ல் வழக்குப்பதிவு செய்தனர்.
குற்றப்பத்திரிக்கை
கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோவில் அர்ச்சகர்கள் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்தது. புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் செய்தபோது, 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என்பது விதி. அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும்.
ஆனால், 'இரு புதிய சிலைகளிலும், தங்கம் சேர்க்கப்படவில்லை' என, முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் அழைத்து வந்த ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்ததில் தெரியவந்தது. இவ்வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி மற்றும் கூடுதல் கமிஷனர் கவிதா, அர்ச்சகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இவ் வழக்கு அடுத்தகட்ட நகர்வு இல்லாமல் முடங்கியது. இதனால், மீண்டும் சிவகாஞ்சி போலீசாரே இவ்வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், 2023ல், சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்தனர். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், கோவில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த ஸ்தபதி மாசிலாமணி ஆகிய இருவரை நீக்கியும், ஹிந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகிய இருவரை சேர்த்தும், சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, 2017ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, 2023ல் சிவகாஞ்சி போலீசாரால் திருத்தப்பட்டுள்ளது. அந்த திருத்தப்பட்ட நகல், மனுதாரரான அண்ணா மலைக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், 312 சவரன் தங்கம் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், ஆனால், ஐ.ஐ.டி., சார்பில் ஆய்வு செய்ததில், துளி தங்கம் கூட இல்லை எனவும், திருத்தப்பட்ட எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒத்திவைப்பு
இதன்படி, 468 பிரிவான போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தல், 471 - போலி என்று தெரிந்தும் உண்மை என்று பயன்படுத்துதல் என்ற பிரிவுகள் நீக்கப்பட்டு, 380 (2) என்ற கோவில்களில் சிலைகள் மற்றும் சிலை சார்ந்த பொருட்களை திருடுவது; 34வது பிரிவில், ஒரே நோக்கத்திற்காக பலர் கூட்டாக குற்றச்செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் துவங்கியுள்ள நிலையில், 312 சவரன் தங்கம் பக்தர்கள் வழங்கியிருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த டிச., 30ம் தேதி, முதன்முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து சமய அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, ஸ்தபதி முத்தையா, அர்ச்சகர்கள் என, ஒன்பது பேர் ஆஜராகினர். அவர்களிடம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இவ்வழக்கு குறித்து கருத்துக்களை கேட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை, பிப்., 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பக்தர்களிடம் நன்கொடை பெற்ற, 312 சவரன் நகைகளின் தற்போதைய மதிப்பு, 3.12 கோடி ரூபாய்.
@block_P@
உற்சவர் சிலை தயாரிப்பு, தங்கம் நன்கொடை தொடர்பாக, தினேஷ் என்ற பக்தர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், 'கடந்த 2015ம் ஆண்டில் சுவாமிமலையில், மாசிலாமணி என்ற ஸ்தபதியால், புதிய உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. சிலை செய்தபோது வீடியோ ஏதும் எடுக்கவில்லை. பக்தர்கள் நன்கொடை வழங்கிய தங்கத்திற்கு ரசீது ஏதும் போடவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், பக்தர்களிடமிருந்து 312 சவரன் நகைகளை, எந்த அடிப்படையில் அறநிலையத்துறையினர் பெற்றனர் என்ற கேள்வி எழுகிறது.block_P
இந்து அறநிலையத்துறை என்று ஒன்று வேண்டவே வேண்டாம் என்று இதற்காகத் தான் கூறுகிறோம். பேசாமல் சிதம்பரம் நடராஜர் கோவில், மேல்மருவத்தூர் கோவில் மாதிரி எல்லா கோவில்களையும், அதன் சொத்துக்களையும் பராரமரிக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட அந்தந்த சமுதாயத்தினரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
தகுதியில்லாதவர்கள் பதவிக்கு வந்தால் இப்படித் தான் நடக்கும். ஆயிரமாயிரம் காலங்களாக கோவில்களை கட்டி ஆண்டு பராமரித்தது நமது சமுதாயம். பல்வேறு படையெடுப்புகள் நடந்தாலும் கோவில்களையும், சாமி சிலைகளையும், நகைகளையும், நிலங்களையும் சரிவர பராமரித்து வந்தனர். அப்படி பராமரித்தவர்களிடம் இருந்து கோவில்களை புடுங்கி எடுத்துக் கொண்டு கடந்த எழுபது ஆண்டுகளில் என்ன சாதித்தது அரசாங்கம் ? பல கோவில்களை காணவில்லை, பல கோவில்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன, பல கோவில்களில் பூஜை இல்லை, பல கோவில்களை இடிக்கப்பட்டன, கோவில் நிலங்கள் அம்போ, நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் உள்ளது, காணிக்கைகளில் கார்களாக உள்ளன, சமோசா-போண்டா-பஜ்ஜி சாப்பிட உண்டியல் பணம், கடவுளிடம் பாகுபாடு இல்லை என்று கூறி சாமி தரிசனம் செய்ய கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி கட்டணக் கொள்ளை, திருப்பணி செய்கிறேன் என்று தங்கம், வெள்ளி, சிலைகள் காணாமல் போனது, இப்போது கொவிளைகளையும் அதன் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டிய அறநிலையத்துறையும், அரசாங்கமும் அதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்காடுகிறது. பக்தர்களை சாமி கும்பிட முடியாமல் தடுக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் காணிக்கை தங்கத்தை வைத்து செய்த சிலையில் தங்கமில்லாமல் இருப்பது எந்த அதிர்ச்சியும் இல்லை. தங்கம் தங்கம் இருந்தால் தான் அதிசயமாக பார்க்க வேண்டும். சாமி சிலை என்று ஒன்றை வைத்தார்களே.
சம்பந்தப்பட்ட இரு உயரதிகாரிகளுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளதாம்.
கோவில்களை அரசு நிர்வாகத்திடமிருந்து மீட்கனும். அதற்கான கட்சிக்கு இந்துக்கள் ஒற்றுமையாக ஓட்டளிக்கனும்.
எல்லாம் அறிவாலயதுக்கு சரியாக போய் கோவில் கட்டி முடிச்சாச்சி.....
நிர்குண பரம்ப்ரும்மத்திற்கு தங்கமும் வெள்ளியும் வீண்.
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். பக்தர்கள் அதீத பக்தியினால் தங்க கவசம் வெள்ளி கவசம் போன்றவைகளை செய்து கொடுக்கிறார்கள். வேலியே பயிரை மேயும் இந்த காலத்தில் அடியார்கள் தங்கள் செயல்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
கோயில் சொத்துக்களை திருடுபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் மிகப்பெரிய தண்டனை கடவுளால் குடுத்து அதை எல்லோரும் அறியும்படி செய்தால்தான் திருடர்களுக்கும், திருடும் எண்ணம் உள்ளவர்களுக்கும் ஒரு பயம் வரும்..
அரசும் தண்டிக்க வில்லை
பழம் கால சிலைகளில் அதிக அளவு தங்கம் உண்டு. எனவே பழம்கால சிலைகளை சேதப்படுத்தி ரெகார்ட மாத்தினா தானே வெளி நாட்டில் விற்க முடியும்? ஒரு நல்ல பணம் தேத்தலாம்.
ஹுண்டியலில் பணம் போடக்கூடாது. தங்கம் காணிக்கை செலுத்தக்கூடாது . இதை எல்லோரும் செய்ய வேண்டும்.
கோவில்களை கொள்ளை கும்பலிடம் இழந்து நிற்கும் அறிவில்லா இந்துக்களை என்ன சொல்வது?மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது