மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை மூடணும்: பா.ம.க., ராமதாஸ் கோரிக்கை

3

சென்னை: 'மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


அவரது அறிக்கை:

'மது குடிக்க பணம் கேட்டு தாக்கிய மகனை கொலை செய்த பெற்றோர்; மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்து கொன்ற மகன்; மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி சிறைக்கு சென்றதால், அனாதைகளான மூன்று குழந்தைகள்' என, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதை கண்டும் காணாமல், தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதனால் சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன், குடும்ப நிம்மதியும் குலைகிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.

பள்ளி, கல்லுாரி அருகில் உள்ள மதுக்கடைகளை மூட நீதிமன்றங்கள் உத்தரவிட்டும், அவை முழுமையாக கடைப் பிடிக்கப்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின் தன் பொறுப்பை தட்டிக் கழிக்காமல், படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். முதல் கட்டமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement