நிதி மேலாண்மையை தமிழக அரசு எப்படி கடைபிடிக்க போகிறது: கேட்கிறார் சீமான்
காரைக்குடி: தமிழகத்தில் ஏற்கனவே நிதி மேலாண்மையின்றி ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துள்ள நிலையில், தற்போது எப்படி நிதி மேலாண்மையை சமாளிக்க போகிறார்கள் என தெரியவில்லை என காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டாக போராடி வந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தலின் போது மட்டுமே ஓய்வூதிய அறிவிப்பு செய்துள்ளனர். இது ஆளும் அரசின் ஓட்டு அறுவடையை நோக்கி தான் என்பதை காட்டுகிறது. அரசு ஊழியர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், முன்பே அறிவித்திருக்க வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியது போல் பெரிய நிதிச்சுமை தான் ஏற்படும். துாய்மை பணியாளர்கள் நீண்ட நாட்கள் போராடி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன. மாற்று பொருளாதார பெருக்கம் இல்லை.
அரசுக்கு வரி, மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் தான் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மக்களை சுமைக்குள்ளாகியுள்ளது. ரூ.10லட்சம் கோடி கடன் பெற்றும், மாநிலத்தில் எந்தவித திட்டமும் சிறப்பாக நிறைவேறவில்லை.
பெண்கள் மாதம் ரூ.1000 கேட்டு வீதியில் போராடவில்லை. இது ஓட்டுக்களை பறிக்கும் நுட்பமாக தான் பார்க்கிறேன். எந்த கருத்து கணிப்பும் ஓட்டாக போவதில்லை. புதிதாக நாட்டை உருவாக்க நினைக்கிறோம். வடமாநில இளைஞர்கள் வருகையும், போதை பொருள் வரக்காரணமாக உள்ளது. மருத்துவமனையில் டாக்டர்கள் மது அருந்தியது பெரிய குற்றமில்லை. ஏனென்றால் அரசே மதுபானம் விற்கிறதே? இவ்வாறு சீமான் கூறினார்.
வாசகர் கருத்து (5)
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
05 ஜன,2026 - 15:36 Report Abuse
அதெல்லாம் தங்கம் தண்ணியரசு பாத்துப்பார். சைமன் ஜெயிச்சு வந்தப்புறம் பாத்துக்கலாம்.சைமன் கேக்கும் கேள்வி சைமன் ஆளுங்களுக்கு புரியுமா? 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
05 ஜன,2026 - 05:54 Report Abuse
இந்த கேள்வி கேக்கற அரசியல் கட்சிகள் எல்லாரும், நீங்க வந்தா மட்டும் நிதி நிலைமைக்கு என்ன பண்ணுவிங்கனு ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க ?? நீங்க தான், தனியார் மயம் கூடாது, அனைவரையும் அரசு ஊழியர் ஆக்கணும்னு, போராட்டத்துக்கு ஆதரவு தரிங்க. உங்க எல்லாரோட பேச்சைக்கேட்டு, இப்போ போராடிட்டு இருக்கறவங்கள எல்லாம் அரசு ஊழியர் ஆக்கிட்டா, அரசின் நிதி சுமை பலமடங்கு ஆகிடாதா ?? அரசு திவாலாகாதா ? இதனால் பொதுமக்கள் தானே பாதிக்கப்படுவாங்க. இதையெல்லாம் தெரிஞ்சி வெச்சிகிட்டே, அப்புறம் எதுக்கு, அரசியல் கட்சிகள் எல்லாம், தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கறிங்க ? பிள்ளையையும் கிள்ளி விடுவீங்க, தொட்டிலையும் ஆட்டுவீங்களா ?? 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
05 ஜன,2026 - 04:17 Report Abuse
தனக்கும், தன்னுடைய குடும்பத்துக்கும் நிதிகளை சுருட்டி வைத்துக்கொள்ளும் மேலாண்மை திமுகவினருக்கு அதிகம் உண்டு. ஆட்சிக்கு வராமலே சீமான் தும்பிகளிடம் நிதிகள் மேலாண்மை மூலம் பணத்தை புடுங்கி, சுருட்டி வருகிறார் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 ஜன,2026 - 21:40 Report Abuse
நிதி மேலாண்மை எல்லாம் திமுகவுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரசு நிதியில், கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க பட்டிதொட்டிகளில் எல்லாம் சிலைவைக்க மட்டும்தான் தெரியும். 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
04 ஜன,2026 - 21:16 Report Abuse
He idiotic intelligent , when tamils went to Delhi and Mumbai for work , was he happy??? 0
0
Reply
மேலும்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி
-
நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
-
மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை மூடணும்: பா.ம.க., ராமதாஸ் கோரிக்கை
-
இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை
-
பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்
Advertisement
Advertisement